ஓமன் நாட்டின் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ”எம்.டி செலஸ்டியல்” என்ற கப்பலில் பணிபுரிந்து வந்த தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த நிஷாந்த் உயிர்த்த நாதன் (வயது 35) என்ற இரண்டாம் நிலை அதிகாரி, கடந்த 11-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார் என ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஆனால், முறையான மருத்துவ வசதிகள் கிடைக்காத காரணத்தாலும், கப்பல் நிறுவனத்தின் அலட்சியத்தாலும் நிஷாந்த் உயிரிழந்துள்ளார் என இந்தியாவில் உள்ள மாலுமிகள் மற்றும் கப்பல் பணியாளர்கள் சங்கமான எப்.எஸ்.யூ.ஐ தெரிவித்துள்ளது.

நிஷாந்தின் உடலைப் பாதுகாக்க போதுமான குளிரூட்டும் வசதிகள் கப்பலில் இல்லாததாலும், மூன்று நாட்களைக் கடந்துவிட்டதால் உடல் அழுகத் தொடங்கிவிட்டதாகவும், எக்ஸ் தளத்தில் எப்.எஸ்.யூ.ஐ பகிர்ந்துள்ள ஒரு காணொளியில் எம்.டி செலஸ்டியல் கப்பலின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நிஷாந்த், தனது 21-ம் வயது முதலே கப்பல் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு சரோபின் என்ற மனைவியும், மூன்று வயது பெண் குழந்தையும், பத்து மாத பெண் குழந்தையும் உள்ளனர். நிஷாந்தின் மனைவி சரோபின், “மத்திய கிழக்கு பகுதியில் போர் தொடங்கியது நாள் முதலே, பயந்துகொண்டேதான் இருந்தோம்.