
இது போன்ற தவறான முடிவுகளுக்கு செல்ல வேண்டாம். மாணவர்களுக்கு கோரிக்கை விடுக்கிறோம். கண்டிப்பாக மாணவர்களுக்கு மன உளைச்சல் இருக்கிறது. அதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஒரு முறை தேர்வு வைத்து , ரத்து செய்து மீண்டும் தேர்வு வைப்பது என்பது மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு இருக்கிறது என்பது உண்மை. தமிழக அரசு பிரத்யேகமாக 104 என்ற உதவி மையம் வைத்திருக்கிறோம். அதில் மனநல நிபுணர்கள் இருப்பார்கள். இதை பயன்படுத்திக் கொள்ளலாம். நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதல்வர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மருத்துவம் ஒரு படிப்பு தான். கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை முடிந்து போகவில்லை. நீட் பிரச்சினைக்கு தீர்வு காண சட்டமன்றத்தில் தீர்மானம் மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் அனைத்து வழிகளையும் ஆலோசனை செய்வோம். தமிழகத்தில் மருத்துவமனை கட்டடங்கள் நிறைய பாழடைந்து இருக்கிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதற்கு முன்னதாக அன்னூர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அருண் ராஜிடம் மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அது படிப்படியாக செயல்படுத்த வேண்டும். அதனை செயல்படுத்த அவகாசம் தேவை. மாநிலத்தின் நிதிநிலை அந்தளவில் உள்ளது” என பதிலளித்தார்.