ஓமன்: ‘தீ விபத்தில் பாஸ்போர்ட், விசா எரிந்துவிட்டது’ – இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கும் பெண் | Women suffers on Omen, Passport and visa gone in fire

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு எம்.ஜி.ஆர் காலனித் தெருவைச் சேர்ந்தவர் ஹசர்நிஷா(44). இவருக்கு ஒரு மகளும் மற்றும் ஒரு‌ மகனும் இருக்கின்றனர். கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவரை விட்டு பிரிந்த இவர் தன் தாய் வீட்டில் மயிலாடுதுறையிலே இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

மேலும் வறுமையின் காரணமாக குழந்தைகளை தன் தாயிடம் விட்டுவிட்டு ஓமன் நாட்டிற்கு பல வருடங்களுக்கு முன் வேலைக்கு சென்றதாகவும், பாஸ்போர்ட் விசா போன்ற உரிய ஆவணங்கள் இன்மையால், இந்தியா திரும்ப இயலா நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுக்குறித்து நம்மிடையே பேசிய இவரின் மகன் மாலிக் பாட்ஷா, “என்னுடைய அம்மா எனக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும்போதே பாட்டியிடம் எங்களை விட்டுவிட்டு ஓமன் நாட்டிற்கு வேலைக்கு போயிவிட்டார. வேலை செய்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அவரின் பாஸ்போர்ட், விசா ஆகியவை எரிந்து விட்டது. அதன் பின்னரும் வறுமையின் காரணமாக அங்கேயே கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்ந்துள்ளார். மேலும் என் சகோதரியின் திருமணம், தாத்தாவின் இறப்பு, கணவரின் இறப்பு என எதற்கும் வர இயலவில்லை.

சகோதரியின் திருமணத்திற்கு வரவேண்டும் என நாங்கள் அனைவரையும் போனில் பேசி அழுத நிலையில் கூட அவர் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் போனை ஸ்சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பணம் அனுப்புவதும் இல்லை. இதற்கிடையில் சென்ற ஆண்டு நானும் ஓமன் நாட்டிற்கு சென்று அம்மாவை பார்த்த பொழுதுதான் பாஸ்போர்ட் விசா எரிந்தது பற்றியும், அதனால் இந்தியா திரும்ப முடியவில்லை எனவும் தெரியவந்தது.

ஓமன் அயலக தூதரகத்தில் மனுக்கொடுத்த போது இந்திய நாட்டினை சேர்ந்தவர் என்பதற்கான ஆவணம் ஏதேனும் அளிக்கும் பட்சத்தில் இந்தியா திரும்ப வழிகை செய்யப்படும் என்று கூறினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *