கங்குலி வார்த்தைக்கு மரியாதை.. வந்துட்டாரு யுவராஜ் சிங்.. டெல்லி பேட்டிங் இனி தாறுமாறா இருக்கும்! | Yuvraj Singh appointed as the batting and Assistant coach of the Delhi Capitals under Sourav Ganguly

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபிஷேக் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்டோரின் பெர்சனல் பயிற்சியாளராக யுவராஜ் சிங் இருந்து வரும் சூழலில், டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பணிகளையும் கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் ஆலோசனை கூட்டம் அக்டோபர் 15ல் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அத்தனை அணிகளும் தயாராகி வருகின்றன. அதேபோல் நவம்பர் 15ஆம் தேதி ரிடென்ஷன் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல் டிசம்பர் 15ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலமும் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Yuvraj Singh

இதனால் அத்தனை ஐபிஎல் அணிகளும் பயிற்சியாளர்கள் நியமனத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார். தற்போது கங்குலி தனது புதிய பயிற்சியாளர் குழுவை கண்டறிந்து வருகிறார். அதன்படி டெல்லி அணியின் துணைப் பயிற்சியாளராக யுவராஜ் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பையும் யுவராஜ் சிங் கவனிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இளம் வீரர்களுக்கு பெர்சனல் பயிற்சியாளராக யுவராஜ் சிங் இருந்து வருகிறார். அவரின் அகாடமி மூலமாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு நேரடி பயிற்சியாளராக இருக்கிறார்.

மறுபக்கம் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பார்ட் டைம் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதனால் டெல்லி அணி இம்முறை கூடுதல் பலத்துடனும், புதிய திறமைசாலிகளுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் ரஞ்சி அணிக்கும் யுவராஜ் சிங் அதிகாரப்பூர்வமற்ற பயிற்சியாளராக இருந்துள்ளார்

யுவராஜ் சிங் போன்ற பயிற்சியாளர்கள் இருக்கும் போது, வீரர்கள் ஒழுக்கம் மற்றும் மன வலிமையுடன் செயல்பட முடியும். அடுத்ததாக ஃபீல்டிங் பயிற்சியாளராக முகமது கைஃப் நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் இந்திய வீரர்கள் டெல்லி அணியின் பயிற்சியாளர் குழுவில் இணையக் கூடும் என்று பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *