ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4,105.73 டாலரில் இருந்து நேற்று 4,164.82 டாலராக உயர்ந்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 62.04-ல் இருந்து 59.94 டாலராக நேற்று குறைந்துள்ளது.
ஆக, இப்போது தங்கம், வெள்ளியில் சூப்பர் டிரேடிங் வாய்ப்பு காத்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மீண்டும் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, தங்கம், வெள்ளி விலை ஏறும். ஒரு கட்டத்தில் 4,000 டாலருக்குக் கீழ் இறங்கிய தங்கம் விலை, 4,150 டாலருக்கு மேல் உயர்ந்தது.
அதனால், தங்கம், வெள்ளி விலையில் தற்போதைய சரிவைப் பயன்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம்.