கட்சி தாவ தயாராகும் தேனிக்காரர டு `அய்யாவை சந்திக்க முடியவில்லை’ பாமக-வில் சர்ச்சை! | கழுகார் | Kazhugar updates on pmk and tvk issues

Spread the love

பிரபல கட்டிட நிறுவனம் ஒன்றிடம் 1000 ஸ்வீட் பாக்ஸுகளை கொடுத்து சிக்கிக் கொண்டார் தேனிக்காரர். அதனை ‘நாங்கள் மீட்டுத் தருகிறோம்’ என்று சொல்லிதான், அவருக்கு தூண்டில் போட்டு இழுத்துக்கொண்டது சூரியக் கட்சி. ஆனால், இதுவரை ஒரு பாக்ஸ்கூட திரும்பி வரவில்லை.  இதனால் வெகுண்டெழுந்த அவரது வாரிசு, ‘நாம் ஆளும்கட்சிக்கு போய்விடலாம்… இங்கிருந்தால் கதைக்கு ஆகாது’ என அழுத்தியிருக்கிறார்.

கடைசி வாய்ப்பாக, சூரியக் கட்சித் தலைமையை அணுகி, ‘எனக்கொரு முடிவு சொல்லுங்க’ எனக் கேட்டிருக்கிறாராம் தேனிக்காரர். ஆனால், எந்த பதிலும் வரவில்லையாம். ‘சூரியக்கட்சியில் எதுவும் நடக்கவில்லையென்றால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சிக்கு போய்விடலாம். ஸ்வீட் பாக்ஸுகளை மீட்டுத் தரும் கட்சியில் இருப்போம்’ என தந்தையும் மகனும் முடிவெடுத்துவிட்டார்களாம்.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *