சென்னை ஃபீனிக்ஸ் மாலில் நேற்று மாலை “மீசைய முறுக்கு 2′ பட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சியை நேரில் காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.

நேற்று மாலை வேளச்சேரி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. பல்வேறு இடங்களிலிருந்து பயணித்து ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வுக்கு வந்துக் கொண்டிருந்தார்கள்.
மேலும், இசையமைப்பாளரும், ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் இயக்குநருமான ஹிப்ஹாப் தமிழா ஆதியை நேரில் காணவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஃபீனிக்ஸ் மாலில் திரண்டனர்.
நேரம் செல்லச் செல்ல கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. சென்னை பகுதியின் மிகப்பெரிய மால் எனச் சொல்லப்படும் பீனிக்ஸ் மால் நிரம்பும் அளவுக்குக் கூட்டம் கூடியது.