கட்டுக்கட்டாக பணம்.. ஜூஜூவாடி ஆர்டிஓ சோதனை சாவடியில் சிக்கிய 3.40 லட்சம்! திடீர் ரெய்டின் பின்னணி | DVAC raid on Jujuvadi RTO Check post near Hosur and seized Rs.3.40 lakh

Spread the love

Tamilnadu

oi-Nantha Kumar R

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லையில் உள்ள ஆர்டிஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் வராத 3 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக எல்லை பகுதியான ஜூஜூவாடியில் உள்ள உள் வழி ஆர்டிஓ சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு பேர் சோதனை மேற்கொண்டனர்.

dvac-raid-on-jujuvadi-rto-check-post-near-hosur-and-seized-rs-3-40-lakh

.

இந்த சோதனையின் போது பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் அவரது உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் இருந்தனர்.
இன்று காலை 6:00 மணி அளவில் தொடங்கிய இந்த அதிரடி சோதனை தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அப்போது கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி கணக்கு கேட்கப்பட்டது. அப்போது அதற்கு கணக்கு தெரிவிக்கப்படவில்லை.

இதனா் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையால் காலை முதல் ஆர்டிஓ சோதனை சாவடி பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

ஆர்டிஓ சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகளடம் இருந்து தொடர்ந்து லஞ்சம் வாங்கப்படுவதாக புகார்கள் சென்ற நிலையில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *