கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி ஒருவருக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிக்கு உதவுவது போல நடித்து ஆளுங்கட்சி தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
‘பெண்களைக் காப்பதில் நம்பர் 1 ஆட்சியாக இருக்கும்’ என்று சொல்லியபோது தனது கட்சிக்காரர்கள் இருப்பதை இன்றைய முதல்வர் மறந்துவிட்டாரோ என்னவோ,
இப்படி ஆளுங்கட்சி தவெகவின் காமுக SIR-களால் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
ஆட்சிதான் மாறியதே தவிர, காட்சி மாறவில்லை என்பதைப் போல், தற்போது பாலியல் SIR-களுக்கான Address-ஆக தவெக மாறி நிற்கிறது.
இவ்வளவு கொடுமைகளுக்கும் நடுவே ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’ எங்கே போனது என்றும் தெரியவில்லை? Hibernation Mode?
மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது எந்தவித அரசியல் குறுக்கீடும் இன்றி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.