கருஞ்சீரகம்… சிறிய விதையில் பெரிய மருத்துவ சக்தி! – Kumudam

Spread the love

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் கருஞ்சீரகம், பண்டைய எகிப்து, கிரேக்கம், ரோம் போன்ற நாகரிகங்களில் முக்கிய இடம் பெற்றிருந்தது. இன்றும் மத்திய கிழக்கு, தெற்காசியா உள்ளிட்ட பல நாடுகளில் சமையல் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

இஸ்லாமிய, சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ மரபுகளில் உயர்ந்த இடம் பெற்றுள்ள கருஞ்சீரகம், சுமார் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான மருத்துவப் பயன்பாட்டு வரலாற்றைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. மத்தியதரைக் கடல் பகுதி, மத்திய கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆசியா இதன் தாயகமாகும். சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜீரகா, குஞ்சிகா, உபகுஞ்சிகா என்றும், ஆங்கிலத்தில் black cumin, small Fennel  என்றும் ஹிந்தியில் காலாஜீரா, கலோன்ஜி என்ற பெயர்களிலும் அழைக்கப் படுகிறது. பண்டைய நாகரிகங்களில் இது அனைத்து நோய்களுக்கும் மருந்து என்றும் அமரத்துவ விதை என்றும் போற்றப்பட்டது. சித்த மருத்துவத்தில், அஜீரணம், கப நோய்கள். சளி, இருமல், குடல் கிருமிகள் மற்றும் உடல் வலிமை ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கருஞ்சீரகத்தில் என்ன இருக்கு?

கருஞ்சீரகம் ஒரு சாதாரண மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் பல் வேறு மருத்துவ நன்மைகளையும் வழங்கும் மதிப்புமிக்க உணவுப் பொருளாகக் கருதப் படுகிறது. ஆம் சுருஞ்சீரகம் பல்வேறு ஊட்டச்சத்துகள், தாதுக்கள் மற்றும் உயிர்ச் செயல்பாடு வேதிப்பொருட்களைக் கொண்ட ஒரு முக்கிய மருத்துவ விதையாகும்.

100 கிராம் கருஞ்சீரகத்தில் சுமார் 345-375 கிலோ கலோரி ஆற்றல் கிடைக்கிறது. இதில் 20-22 கிராம் புரதம், 35-40 கிராம் கொழுப்பு. 30-35 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 10-12 கிராம் நார்ச்சத்துகளை உள்ளடக்கியுள்ளது. மேலும், கருஞ்சீரகம் கால்சியம், இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் (Zinc) போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாக விளங்குகிறது.

இதில் வைட்டமின் B. (Thiamine), வைட்டமின் B2 (Riboflavin),  வைட்டமின் B3 (Niacin), ஃபோலேட் போன்ற வைட்டமின்களும் உள்ளன. கருஞ்சீரகம் புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்பு அமிலங்கள், கால்சியம். இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் மற்றும் பி வகை வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். இதில் காணப்படும் தைமோகுயினோன் (Thymoquinone) தைமோல் (Thymol), நைஜெல்லோன் (Nigellone), தைமோஹைட்ரோகுயினோன் (Thymohydroquinone), பிளேவனாய்டுகள், சாபோனின்கள் போன்ற வேதிப்பொருட்கள் இந்தச் சிறிய விதையின் மருத்துவக் குணங்களை அதிகரிக்கின்றன.

நீரிழிவு நோய் கட்டுப்பாடு

கருஞ்சீரகத்தில் உள்ள முக்கிய வேதிப் பொருளான தைமோகுவினோன் மற்றும் பிற ஆன்டி ஆக்ஸிடன்ட் சேர்மங்கள் உட லில் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்கிறது ஆய்வு கள். இவை சுணையத்தில் உள்ள பீட்டா செல்களை ஆக்ஸிடேட்டிவ் சேதத்திலிருந்து பாதுகாத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் செல்கள் இன்சுலினை உட்கிரகிக்கும் திறனை (Insulin sensitivity) அதிகரிப்பதால், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைய உதவுகிறது.

குறிப்பாக உணவுக்குப் பிறகு திடீரென ரத்த சர்க்கரை அதிகரிப்பதை குறைக்க இது உதவுகிறது என்கின்றன சில ஆய்வுகள். கருஞ்சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் உயிர்ச் செயலுள்ள வேதிப்பொருட்கள் குடலில் குளுக்கோஸ் உறிஞ்சப்படு வதை தாமதப்படுத்தி, உணவுக்குப் பின் திடீர் ரத்த சர்க்கரை உயர்வைத் தடுக்கின்றன. அதோடு கல்லீரலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைத்து,உடலில் ஏற்படும் நீடித்த அழற்சி   (Chronic inflammation) மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயின் சிக்கல்களையும் தணிக்க உதவுகின்றன.

பல ஆய்வுகளில் கருஞ்சீரகத்தை தொடர்ந்து பயன்படுத்தியவர்களில் வெறும் வயிற்று ரத்த சர்க்கரை உணவுக்குப் பிந்தைய சர்க்கரை மற்றும் HbAlc அளவுகள் குறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளன. பெரும் உபாதையான சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் சித்த மருத்துகளில் கருஞ்சீரகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்றே சொல்லலாம். ஆனால், நீரிழிவு நோயாளிகள் சித்த மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக இதைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் கருஞ்சீரகம் நீரிழிவை கட்டுப்படுத்தும் மருந்துகளில் துணையாக சேர்க்கலாம். அதே நேரம் நீரிழிவு நோயாளிகள் வழக்கமான கட்டுப்பாடுகளை தளர்த்திகொள்ளவும் கூடாது.

கொலஸ்ட்ரால் குறைய கருஞ்சீரகத்தில் காணப்படும் லினோ லெயிக் அமிலம் (Linoleic Acid – ஒமேகா 6) மற்றும் ஒலெயிக் அமிலம் (OleicAcid- ஒமேகா9) போன்ற நல்ல கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கச் செய்கின்றன. இவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் செய்யலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், கருஞ்சீரகத்தில் உள்ள சாபோனின்கள் (Saponins), கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, உடலின் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவக்கூடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *