ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் “கருப்பு’.
ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் எனப் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
மே 15 ஆம் தேதி தான் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் ‘The Hollywood Reporter India’ ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் ஆர்.ஜே பாலாஜி முதலில் ‘கருப்பு’ படத்தை நடிகரும், முதல்வருமான விஜய்காக எழுதியதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், ” உண்மையில் ‘கருப்பு’ படம் விஜய் சாருக்காகவே எழுதப்பட்டது.