Tamilnadu
oi-Vishnupriya R
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாளை “வீ தி லீடர்ஸ்” அமைப்பின் போதையில்லா தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. இந்த முதல் மாநாட்டை அண்ணாமலை தலைமையேற்று நடத்துகிறார்.
அரசியல் கட்சியில் இணைவதற்காக ஐபிஎஸ் வேலையை உதறிவிட்டு வந்த அண்ணாமலை, பாஜகவில் இணைந்தார். இவர் இணைந்ததுமே மாநில தலைவர் என்ற பதவி கொடுக்கப்பட்டது.

அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன் வந்தார். அவரது தலைமையில் பாஜக, சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போது கூட்டணி பேச்சுவார்த்தையின் போது அண்ணாமலை கூறிய விஷயங்களை யாரும் மதிக்கவில்லை என்பதால் அவர் விரக்தி அடைந்து பாஜகவில் இருந்து வெளியேறினார்.
இதையடுத்து வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை தொடங்கிய அண்ணாமலை, இதை அரசியல் கட்சியாக மாற்ற போகிறார். தற்போது இந்த அமைப்பிற்கு 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் ஜூலை 12 ஆம் தேதியான நாளை பொள்ளாச்சியில் முதல் மாநாட்டை நடத்த அண்ணாமலை அறிவித்துள்ளார். நாளை மாலை 4 மணிக்கு ஆச்சிப்பட்டியில் இந்த மாநாடு போதையில்லா தமிழகம் என்ற பெயரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அண்ணாமலை ஐபிஎஸ்ஸாக இருந்த போது எடுத்த படங்கள் பேனர்களில் வைக்கப்பட்டுள்ளன. அது போல் அவர் பவர்ஃபுல் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்றும் படங்கள் உள்ளன.

விரைவில் இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறவுள்ள நிலையில் இந்த மாநாடு குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: முதல்வர் விஜய்யின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பொள்ளாச்சியில் விரிவாக பேசுகிறேன். கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கியது குறித்தும் நாளை பேசுகிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.