பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலன்ஞ்ச் உருவானது எப்படி? சுவாரஸ்யமான விஷயம் | How did the Britannia Milk Bikis Thirukkural Challenge come about? An interesting story

Spread the love

Business

oi-Velmurugan P

சென்னை: ‘மில்க் பிகிஸ்’ ஒரு தனித்துவமான தமிழ் பிரச்சாரத்தின் மூலம் திருக்குறளை உயிர்ப்பித்து வருகிறது. அன்றாடம் அனைவரும் சாப்பிடும் ஒரு பிஸ்கட்டில், திருக்குறளை அறிமுகப்படுத்தும் சுவாரஸ்யமான முயற்சியை பிரிட்டானியா மில்க் பிகிஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இப்போது இளைய தலைமுறை எல்லாமே இணைய தலைமுறையாகவும், இன்ஸ்டா தலைமுறையாகவும் மாறி உள்ளது. எனவே இன்றைய தலைமுறையினருக்கு தமிழர் பண்பாட்டின் மிகப் பெரிய பொக்கிஷங்களில் ஒன்றான திருக்குறளை எளிமையாகவும், நெருக்கமாகவும், மகிழ்ச்சியுடனும் அணுகும் வாய்ப்பை வழங்கவே பிஸ்டிகட்டில் திருக்குறளை பதித்துள்ளது பிரிட்டானியா மில்க் பிகிஸ் நிறுவனம்.

பிரிட்டானியா மில்க் பிகிஸ் நிறுவனம், தனது பிஸ்கட்டுகளில் தமிழ் எழுத்துக்களைப் பொறிப்பதன் மூலம் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்டாடும் வகையிலான ‘மில்க் பிகிஸ் திருக்குறள் சேலஞ்ச்’ எனும் ஆக்கப்பூர்வமான முயற்சியை அறிமுகப்படுத்தி உள்ளது.

How did the Britannia Milk Bikis Thirukkural Challenge come about An interesting story

திருக்குறளின் காலத்தால் அழியாத ஞானத்தை, குழந்தைகள் மற்றும் இளம் நுகர்வோருக்கு மகிழ்ச்சியான மற்றும் ஈடுபாட்டைத் தூண்டும் வகையில் அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று பிரிட்டானியா மில்க் பிகிஸ் நிறுவனம் கூறியுள்ளது, பிஸ்கட்டுகளில் ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் துல்லியமாக வடிவமைத்து உருவாக்க, வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்திப் பிரிவினர் இணைந்து இரண்டு மாதங்கள் பணியாற்றியதாக பிரிட்டானியா நிறுவனம் கூறியுள்ளது,

2,000 ஆண்டு பழமையான திருக்குறள் இன்னும் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் பொருந்தும். மனித வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும், அவர்களுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் மற்றும் உறவுகளைப் பற்றிய காலத்தால் அழியாத உலகப்பொதுமறை நூல் என்றால் அது திருக்குறன் தான். ஆனால் திருக்குறளை இன்றைய இன்ஸ்டா தலைமுயை ஒப்பிக்க சொன்னால், அல்லது படிக்க சொன்னால் வேப்பங்காய் போல் கசக்கிறது. அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வேண்டிய நிலைேே இருக்கிறது.. எனவே திருக்குறளை இன்றைய தலைமுறைக்கு பொருத்தமான, புதிய வழிகளில் அறிமுகப்படுத்த பலரும் முயன்று வருகிறார்கள் அந்த வகையில் தான் மில்க் பிக்கிஸ் நிறுவனம் த தமிழ்மொழி, மரபுகள் மற்றும் பண்பாட்டு பெருமையை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் விதமாக மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் திருவிழாவை உருவாக்கி உள்ளது.

அன்றாடம் அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடும் ஒரு பிஸ்கட்டை, திருக்குறளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் சிறுகுழந்தைகளுக்கு தமிழர் பண்பாட்டின் மிகப் பெரிய பொக்கிஷங்களில் ஒன்றான திருக்குறளை எளிமையாகவும், நெருக்கமாகவும், மகிழ்ச்சியுடனும் அணுகும் வாய்ப்பை வழங்கி உள்ளது. எளிமையாகத் தோன்றிய இந்த யோசனையின் பின்னால், பண்பாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பெரிய அர்பணிப்புடன் ஒரு குழு பணியாற்றி உள்ளது.. பிஸ்கட்டில் பொறிக்கப்பட்ட சில வார்த்தைகளாகத் தோன்றிய இந்த முயற்சி, இரண்டு மாதங்கள் முடிவில் நீண்ட துல்லியமான வடிவமைப்பில் வந்திருக்கிறது.

ஒவ்வொரு தமிழ் எழுத்தும் மிகுந்த கவனத்துடன் மீண்டும் வடிவமைக்கப்பட்டது. ஒரு சிறிய புள்ளி கூட தவறினால், ஒரு சொல்லின் பொருளே மாறிவிடும். வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் உற்பத்திக் குழுவினர் இணைந்து பல கட்ட சோதனைகள் மூலம், தமிழ் எழுத்துக்களின் நுணுக்கங்களைத் துல்லியமாகப் பதிக்கும் அச்சுகளை உருவாக்கி உள்ளார்கள். மேலும், பிஸ்கட் சுடப்பட்ட பிறகும் ஒவ்வொரு எழுத்தும் தெளிவாகவும் வாசிக்கக்கூடியதாகவும் இருப்பதை தயாரிப்பு குழுவினர் உறுதி செய்தனர். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான திருக்குறளுடன் புதிய தலைமுறையினர் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள ஊக்குவிப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *