மதுரை மாவட்டம், மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி ‘போதையில்லாத மேலூர், பெண்கள் பாதுகாப்பு’ என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தவெக, காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்தப் போட்டியை உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் விஸ்வநாதன் , “ ஐயூஎம்எல் த.வெ.கவுடன் கூட்டணி அமைத்திருப்பது ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. மேகதாது அணைப் பிரச்சனை சம்பந்தமாக சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சர் விஜயால் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.