கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்; தண்டனை குறைப்பு செய்த நீதிமன்றம்; காரணம் என்ன? \ Husband killed pregnant wife; court reduced the sentence; what was the reason?

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தனது 7 மாத கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கி படுகொலை செய்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சின்வாரா நீதிமன்றம் சிவாவிற்கு ஆயுள் தண்டனை விதித்தது. இத்தண்டனையை எதிர்த்து சிவா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் அகர்வால் மற்றும் அவனிந்திர குமார் சிங் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு அரசு வழக்கறிஞர் அளித்த தகவலில், “சம்பவத்திற்குப் பிறகு சிவாவே நேரடியாக மனைவி கிரணின் உறவினர்களைத் தொடர்புகொண்டு, தான் தன் மனைவியைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

அதற்கான காரணத்தைக் கேட்டபோது, கிரண் அவரிடம், ‘உன்னைப் போன்ற ஆயிரம் கணவர்களை என்னால் வைத்திருக்க முடியும்’ என்று கூறியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அவர், அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து மனைவியைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவரே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட கிரண் உயிரிழக்கும்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி அவரது முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன’ என்று அரசு வழக்கறிஞர் குற்ப்பிட்டார்.

இவ்வழக்கில் உயர் நீதிமன்றம், கிரணின் மரணத்திற்கு சிவாவே பொறுப்பு என்பதை உறுதி செய்த அதே வேளையில், அந்தத் தாக்குதலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன்கூட்டியே திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கம் இருந்திருந்தால், தான் செய்த செயலைப் பற்றி போலீஸாருக்கும், பாதிக்கப்பட்டவரின் உறவினர்களுக்கும் அவரே முதன்முதலில் தகவல் தெரிவித்திருக்க மாட்டார் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்தச் சம்பவம் திடீரென நிகழ்ந்தது என்றும், முன்கூட்டியே திட்டமிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கல் சம்பவ இடத்திலேயே கிடந்தது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், அந்தப் பெண் மீது தொடர்ச்சியாகப் பலமுறை கல்லைக்கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை ஆதாரங்கள் நிரூபிக்கவில்லை என்று குறிப்பிட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *