தர்மபுரியை குறிவைக்கும் விஜய்! பாமக ராமதாஸ், அன்புமணி சமரசத்தால் தவெக-வுக்கு தாவுகிறாரா சேலம் அருள்? | Is Vijay Targeting Dharmapuri? Will Salem Arul Join TVK After the PMK Reconciliation?

Spread the love

Tamilnadu

oi-Hema Vandhana

தர்மபுரி: பாமகவில் மறுபடியும் பூசல்கள் ஆரம்பமாகி உள்ளன.. அதிலும் முன்னாள் எம்எல்ஏ அருள், எப்போது என்ன முடிவெடுக்க போகிறார் என்றே தெரியவில்லை.. டாக்டர்கள் ராமதாஸ் – அன்புமணி 2 பேரும் கட்டிப்பிடித்து பாசமழை பொழிந்ததுமே, பலருக்கும் பாமகவில் தூக்கி வாரிப்போட்டுள்ளது.. அதில் ஒருவர் பாமகவின் அருள் ஆவார்.. இவரது அடுத்த நகர்வு என்னவாக இருக்க போகிறது என்பதுதான், வடமாவட்ட பாமகவின் எதிர்பார்ப்பாக உருமாறி உள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான ஒரு வருட அரசியல் மோதல், சமீபத்தில் தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்பால் ஒரு முடிவுக்கு வந்தது.

Dharmapuri Salem Arul PMK TVK Vijay Anbumani Ramadoss Dr Ramadoss Tamil Nadu Politics

அன்புமணி ராமதாஸ்

ராமதாசின் 61-வது திருமண நாளில், தந்தையும் மகனும் கட்டித்தழுவி கண்ணீர் மல்க சமரசம் செய்துகொண்ட நிகழ்வு, அந்த கட்சியின் தொண்டர்களிடையே ஒருபுறம் நிம்மதிய தந்திருந்தாலும், இன்னொருபக்கம் புயலை கிளப்பியிருக்கிறது… முக்கியமாக, இந்த மோதலில் ராமதாஸ் அணியின் தீவிர முகமாக செயல்பட்ட சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அரசியல் ரீதியாக தனித்து விடப்பட்ட உணர்வில் இருப்பதாக தெரிகிறது.

“ராமதாஸை நம்பி பயணித்து பல கோடிகளை இழந்து, நட்டாற்றில் நிற்கிறோம்” என்றெல்லாம் குமற ஆரம்பித்துவிட்டார் அருள்.. இது வெறும் தனிப்பட்ட கோபம் மட்டுமல்ல, அது பாமகவின் அடிமட்ட மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் தடுமாற்ற நிலையையே வெளிப்படுத்துவதாக உள்ளது..

சேலம் பாமக அருள்

அப்பா-மகன் மோதலை நிஜமென்று நம்பி, அன்புமணியை கடுமையாக விமர்சித்து, களத்தில் காரைக்கூட இழந்து நின்ற நிர்வாகிகளுக்கு, இந்தத் சமரசம் அதிர்ச்சியை தந்துள்ளதாக கூறுகிறார்கள்.. ஒருவேளை இந்த இணக்கம் முன்பே நடந்திருந்தால் பாமகவிற்குப் பெரிய அரசியல் அந்தஸ்தே கிடைத்திருக்கும், யாரும் கடனாளியாகியாக நின்றிருக்க மாட்டார்கள், இநத் காலங்கடந்த இணைப்பால் தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது என்பதுதான அருள் முன்வைக்கும் குமுறலாகும்.

அதனால்தான், அருள் சென்னை மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த அதிருப்தி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறமுத. இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவை அறிவிப்போம் என்றும் அருள் பஞ்ச் வைத்திருப்பது மிகப்பெரிய எதிர்பாரப்பை பாமக கூடாரத்துக்குள் ஏற்படுத்தி உள்ளது..

அப்படியானால் அருள் என்ன முடிவெடுக்க போகிறார்? ஒன்று, புதிய கட்சியை தொடங்குவது, அல்லது வளர்ந்து வரும் தமிழக வெற்றிக் கழகம் நோக்கி நகர்வது, என்ற இரண்டில் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வாய்ப்புள்ளதாம்.

தர்மபுரி பாமக கோட்டை

ஒருவேளை அருள் புதிய கட்சி தொடங்கினால் அது பாமகவுக்கு சவாலாக அமையலாம்., வன்னியர் சமூக வாக்குகளையும், வட மாவட்டக் கட்டமைப்பையும் பலமாகக் கொண்ட பாமகவுக்குள் ஏற்படும் எந்தவொரு பிளவும், தேர்தல் களத்தில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக, ராமதாஸ் அணியில் தீவிரமாக உழைத்த திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களின் முக்கிய நிர்வாகிகள் அருள் பக்கம் நகர்ந்தால், அது பாமகவின் வாக்கு வங்கியை நேரடியாகவே பாளமாக பிரிக்கும். காடு வெட்டி குருவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதிருப்தியாளர்களை போல, அருளின் புதிய முயற்சியும் பாமகவின் பாரம்பரியக் கோட்டைகளில் விரிசலையும் ஏற்படுத்தலாம். அதிலும் பாமகவின் கோட்டையான தர்மபுரியில் விரிசல் எழலாம்.

தவெகவுக்கு செல்லுமா பாமக வாக்குகள்

அல்லது அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தவெக பக்கம் போனால் என்னாகும் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வரும் தவெக-விற்கு, வட மாவட்டங்களில் வலுவான மற்றும் தேர்தல் கள அனுபவமிக்க நிர்வாகிகள் தேவைப்படுகிறார்கள். அருள் போன்ற களப்பணியாளர்கள் தவெகவில் இணைந்தால், அது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும். அதேநேரம், பாமகவின் வாக்குகள் தவெகவிற்கு மடைமாறவும் இது வழிவகுக்கும்.

அன்புமணியை அன்று விமர்சித்துவிட்டு இப்போது மீண்டும் அவரிடமே சரணடைவதை ஏற்க முடியாத மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அதிருப்தியில் இருக்கும்போது, அருள் எடுக்கப்போகும் அந்த முடிவு, என்னவாக இருக்கும் என்பதுதான் பலரது எதிர்ப்பாக உள்ளது.. அந்த முடிவு எதுவாக இருந்தாலும், அது பாமகவின் எதிர்கால அரசியல் பலத்தைத் தீர்மானிப்பதோடு, வட மாவட்ட அரசியல் கணக்கில் மாற்றத்தையும் உருவாக்குவதாக அமையும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *