களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா vs ஜிம்பாப்வே போட்டியை எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? | Vaibhav Sooryavanshi: When and Where to watch the Live streaming of the 1st T20 Match between India and Zimbabwe

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

ஹராரே: இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை மாலை தொடங்க உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி எப்போது தொடங்கும், எந்த சேனல் மற்றும் ஓடிடியில் நேரலையில் காணலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின் இந்திய அணி மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு, புதிய பவுலர்களை அடையாளம் காணும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் இந்திய அணி அடுத்தடுத்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

Vaibhav Sooryavanshi

முதலில் அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீதும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங், மயங்க் யாதவ் உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பிரப்சிம்ரன் சிங், அசோக் சர்மா, யாஷ் தாகூர் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோரும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு இந்திய பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி நாளை ஹராரே மைதானத்தில் நடக்க உள்ளது.

இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு டாஸ் போடப்பட்டு, மாலை 4.30 மணிக்கு முதல் பந்து வீசப்படும். அதேபோல் இந்திய ரசிகர்கள் இந்தப் போட்டியை யுனைட்8 ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் பார்க்கலாம். ஓடிடியை பொறுத்தவரை ஃபேன்கோட் செயலி மற்றும் இணையதளத்தில் இந்தப் போட்டியை பார்க்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *