களைக்கொல்லியா… விவசாயிகளின் உயிர்க்கொல்லியா? – Kumudam

Spread the love

பயிர்களுக்கு இடையேயான தேவையற்ற செடிகளை விரைவாக அழிக்க இந்த ‘பாராகுவாட்’ களைக்கொல்லி பயன்பட்டாலும் இதனால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்கிறார்கள் விவசாயிகள், காரணம், இதன் நச்சுத்தன்மை என்பது மற்ற களைக்கொல்லிகளைவிட 100 சதவிகிதம் அதிகம் என்பதுதான். எனவே, இதை அதிக சுவனத்துடலும், பாதுகாப்பு கவச உடைகளை அணிந்துகொண்டுதான் பயன்படுத்தவேண்டும். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் உயிரைப் பறித்துவிடும். ஒரு சொட்டு அளவு நம் தோலில் பட்டாலும் அந்த இடம் அப்படியே கொப்பளித்துப் புண்ணாகிவிடும்.

மரணம் வரை செல்லும் அபாயம்!

இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்குகளுக்கும் பெரியபாதிப்பை ஏற்படுத்திவிடும். களைக்கொல்லி தெளித்த வயல்களில் மேயும் விலங்குகளுக்கு மரணம் நிச்சயம். இதிலுள்ள ரசாயனங்கள் நுரையீரலில் கடுமையான பாதிப்பு. உடனடியாக சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு என மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். இந்த பாராகுவாட்’ களைக்கொல்லியைத் தெளிக்கும்போது அலட்சியமாக இருந்து, சிறிய அளவை நாம் உட்கொள்ள நேர்ந்தாலும் உடனே மயக்கம், வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், மூச்சுதிணறல், நெஞ்சுவலி, கண்கள் பாதிப்பு, நினைவு தவறுதல், உடல் உறுப்புகள் செயலிழப்பு என இறப்பும் உடனே நிகழ்ந்துவிடும்.

அடுத்த கட்டமாக  இந்த ‘பாராகுவாட் களைக்கொல்லி பயன்பாடானது மனித உடலில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கிவிடும். அத்துடன்
நரம்பியல் நோய்களுடன் தொடர்புடைய பார்கின்சன் நோய் ஏற்படவும் வாய்ப்பு. உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர். அத்துடன் இதனால் ஏற்படும். பாதிப்புகளை விரைவாக நீக்கும் சக்தி கொண்ட எதிர்ப்பு மருந்துகள் எதுவும் இல்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்

மொத்த மண்ணுக்கும் பாதிப்பு!

மனித உடலில் இந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் களைக்கொல்லியை பயன்படுத்தும்போது மண்ணில் உள்ள நன்மை பயக்கும் நூற்றுக்கணக்கான நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி மண்ணின் இயற்கைத் தன்மையைப் பெரிதும் பாதிக்கின்றது. அத்துடன் ஒட்டுமொத்த மண்ணையே மலடாக்கிவிடுகிறது. இதைவிட இந்த ரசாயனம் நிலத்தடி நீர்மற்றும் சுற்றுச்சூழலில் நீண்ட காலம் G தங்கியிருந்து காற்று மற்றும் நீர் ஆகாரங்களை மாசுபடுத்திவிடும் அபாயமும் ஏற்பட்டுவிடும். இதனைப் பயன்படுத்தும்போது கையுறை, காலுறை, முகக்கவசம். இதற்கென உள்ள பிரத்யேக உடை ஆகியவற்றை கட்டாயம் அணியவேண்டும். ஆனால், நம் விவசாயிகள் இந்தப் பாதுகாப்பு வழிமுறை எதையும் பயன்படுத்துவதில்லை.

இவ்வளவு தீமைகள் இருப்பது தெரிந்தும் விவசாயிகள் ஏன் இதனைப் பயன்படுத்து கிறார்கள்? என்றால் இதனைத் தெளித்த உடனே களைகள் மடிந்துவிடுவதோடு, மீண்டும் அந்த இடததில் சிறு புல், பூண்டு கூட முளைக்காது என்பதால்தான். ஒரு வயலின் வரப்புகளில் நடக்கவே முடியாத அளவிற்கு களைகள், புல், பூண்டுகள் மண்டி வளர்ந்துகிடந்தால் இந்த ‘பாராகுவாட்’ களைக்கொல்லியை ஒரு முறை தெளித்தாலே போதும் வரப்பு சுத்தமாகிவிடும். இந்தக் கொடூரத்தைத் தெளிவாக உணர்த்தும் போட்டோவை பார்த்தாலே நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

70க்கும் அதிகமான நாடுகளில் தடை!

இந்த பாராகுவாட் கனைக்கொல்லியின் மேலும் சில அபாய பாதிப்புகள் குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் நாகை தமிழ்ச்செல்வன் மிகுந்த அச்சத்துடனேயே விவரித்தார். “இதைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் பாதிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும் தற்கொலை எண்ணம் எழுபவர்களுக்கும். பிறரைக் கொலை செய்யத் துணியும் கொடுங்குணம் உள்ளவர்கள் பலருக்கும் இது உடனடியாக கைகொடுப்பவையாக இருக்கிறது. இந்த பாராகுவாட் கனைக்கொல்லியால் பல அபாயங்கள் நிகழ்ந்துவருவதால் இதனை சீனா, தைவான், தென்கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன.

சீனாவில் தடை இருந்தாலும், சீன அரசின் சைனோகெம்’ குழுமத்தின் ‘சைன்ஜெண்டா’ நிறுவனம்தான் இந்த பாராகுவாட் களைக்கொல்லியை சர்வதேச விற்பனைை இலக்காகக்கொண்டு அதிகமாக உற்பத்தி செய்து உநாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அதாவது, தங்களது நாட்டில் பயன்படுத்த தடை விடுத்துவிட்டு, அதைத் தயாரித்து மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்வது என்பது, ‘நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் மற்றவர்களெல்லாம் நாசமாக போக வேண்டும்’ என்கிற கீழ்த்தரமான எண்ணம்தானே.

இந்த சீனக் கம்பெனியின் தலைமையகம் சுவிட்சாலாத்தில் உள்ளது. பல சர்வதே அமைப்புகளின் தீவிரப் போராட்டங்களுக்குப் பின்னர் இதில் சுவிஸ் அரசும் தலையிட வரும் ஜூன் மாதத்துடன் ‘பாராகுவாட தயாரிப்பை நிறுத்திவிடுவதாக சைன் ஜெண்டா நிறுவளம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நமது இந்தியாவில் ஓடிஷா மாநிலத்தில் மட்டும் இந்த ‘பாராகுவாட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்து மறக்க முடியாத சோகத்தை ஏற்படுத்தியதையடுத்து அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் கேரளாவிலும் ‘பாராகுவாட தற்கொலைகள் அதிகமாக அரங்கேற அங்கேயும் தடை செய்யப்பட்டது. ஆனாலும்,சில இரைமறைவு அரசியல் காரணங்களால் அந்தத் தடை உத்தரவு கடந்த 2012-ம் வருடம் நீக்கப்பட்டிருக்கிறது. இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் ஆய்வின்படி தெலங்கானாவில்தான் ‘பாராகுவாட்’ பலிகள் அதிகம் ஏற்பட்டிருப்பதாக தகம வெளியாகி வருகிறது. வருடத்திற்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை இறக்கின்றார்களாம்.

நாடாளுமன்றத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

பாராகுவாட் மற்றும் அதிக நச்சுத்தன்மையுள்ள 99 களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ள சூழவில், பல மாநில எம்.பிக்களும் ‘பாராகுவாட்டின்’ தடைக்கான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.
அது மிக பயங்கர விஷம் சுய அழிப்புக்கு   (தற்கொலை) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அனைத்து இடங்களிலும் அது எளிதாகக் கிடைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாராகுவாட் தற்கொலை அதிகரித்து வருவதாக டாக்டர்களும் வேதனை தெரிவிக்கின்றனர். தயவு செய்து கூடிய விரைவில் அதைத் தடை செய்யுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்’ என்று பதிலிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பதிவினை தெலங்கானா முதல்வர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தை அவர் ‘டேக்’ செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ‘பாராகுவாட் தடை’ விவகாரம் சூடு பிடிக்க தெலங்கானா வாரங்கல் தொகுதி எம்.பி. கடியம் கால்யா, பாராகுவாட் விபரீதங்கள் மற்றும் பல நாடுகளில்விதிக்கப்பட்ட விபரங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு தடை விதிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். பல பொது நல அமைப்புகளும், விவசாயப் பிரமுகர்களும் தடை கோரி மத்திய அரசிடம் முறையிட்டு வருகின்றனர்” என்றார்.
இது குறித்து இயற்கை வேளாண வல்லுநர்களிடம் பேசினோம். “பாராகுவாட் போன்ற ரசாயனப் பூச்சிக் கொல்லி மற்றும் களைக் கொல்லிகளுக்கு கண்டிப்பாக தடை தேவை. அதேசமயம் நடை மட்டுமே பிரச்னை களுக்குத் தீர்வு ஆகிவிடாது என்பதையும் உணர வேண்டும். இயற்கை விவசாயத்தில் உள்ள பாதிப்பில்லாத பாரம்பரிய தீர்வுக்கான வழிவகைகள் குறித்த விழிப்புணர்வுகளை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டும். சரியான விதைப்பு முறை, பயிர் மாறுபாடு முறை, ஊடு பயிர், வேம்பு கரைசல், பூண்டு, மிளகாய், இஞ்சிச்சாறு கரைசல், பஞ்சகவ்யம். ஜீவாமிர்தம், போன்றவற்றைப் பயன்படுத்துதல் குறித்து விரிவான விளக்கங்கள் மற்றும் அது தொடர்பான அமலாக்கமும் வேண்டும். இதனால் உயிர்பலி விபரீதங்கள் குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரசாயனக் கலப்பில்லாத ஆரோக்கியமான உணவு என பல நன்மைகள் கிடைக்கும்” என்றார்.

தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலைவிமலநாதன். அனைத்து ரசாயனக் களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லிகளும் விஷத்தன்மையுடையவைதான் ஆனாய், சதவீதத்தில்தான் இவை வித்தியாசப்படுகின்றன. மனித இனத்தையே அழிக்கும் இதன் பாதிப்பு குறித்தும், அதைப் பயன்படுத்துவது பெரும் ஆபத்து என்றும் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரே அடிக்கடி வலியுறுத்தி வந்தார். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு கேடு விளைவிக்கும் இப்படியான ரசாயனங்களைத் தடை செய்வது குறித்துச் சிந்திப்பதே இல்லை இதற்குக் காரணம் கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து வரும் பெரும் ஆதாயம். எத்த அரசு வந்தாலும் அவர்கள் அனைவரும் கார்ப்பரேட்களின் காலில் விழுந்துகிடக்கின்றனர். மனித உயிர்களின் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை.

நேர்தன் நேரத்தில் இந்தக் கார்ப்பரேட் கம்பெனிகள் பல ஆயிரம் கோடிகளை நன்கொடையாக வழங்குவதும் இதற்குக் காரணம். இந்தச் கோடிகளை எப்படியும் விவசாயிகளிடமிருந்து அந்த கார்ப்பரேட் கம்பெனிகள் பெற்றுக்கொள்ளத்தான் போகின்றன. மிகச்சிறிய நாடான இலங்கையில் மனித உயிருக்கு ஆபத்தான பல பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், மருந்துப்பொருட்கள்தடைசெய்யப்பட்டுள்ளள. அங்கே தடைசெய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவி பகிரங்கமாக விறப்னை செய்யப்படுகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தேயிலை உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ‘எண்டோசல்பாள்’ என்ற பூச்சிக்கொல்லியை தெளித்த காலத்தில் ஏராளமான வேளான் தொழிலாளர்கள் உடலில் தீர்ந்தா அங்க குறைபாடுகள், நீராத நோய்கள் என பாதிக்கப்பட்டதால்தான் பெரும் பதிரப்பு ஏற்பட்டு அதளை தடை செய்தனர். எண்டோசல்பான முதலில் தடைசெய்த மாநிலம் கேரளா.

எழுதியவர்- ஆர்.விவேக் ஆனந்தன்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *