‘முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?’ டு ‘எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க’ தவிக்கும் மாண்புமிகு! | கழுகார் | Kazhugar updates on TN minister and recent political happenings

Spread the love

கச்சத்தீவு விவகாரத்தில் சர்ச்சையான பதில் கொடுத்து சிக்கிய மாண்புமிகுவை, துறை சார்ந்த விவகாரங்களுக்காக பலதரப்பட்டவர்களும் அணுகினார்களாம்.

அதில் ஒரு தரப்பு, ‘உங்கள் துறையீன்கீழ் வரும் வாரியப் பொறுப்புகளை எங்களுக்கு கொடுங்கள்’ என வேண்டிக் கேட்டிருக்கிறார்கள். மாண்புமிகு எந்த பதிலும் சொல்லாமல் காலம் தாழ்த்திய நிலையில், லட்டுக்கள் தருவதாகச் சொன்னபோதும் மாண்புமிகு செவிமடுக்கவில்லை.

அந்த தரப்பு தொடர்ச்சியாக நச்சரித்த நிலையில், அவர்களை நேரில் அழைத்து, ‘நான் உச்சப்புள்ளியின் நண்பர்தான். ஆனால் என்னுடைய துறைசார்ந்த விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம்கூட எனக்கில்லை என்பதுதான் உண்மை’ எனக் குமுறியிருக்கிறார்.

இவர் மட்டுமல்ல, பல்வேறு மாண்புமிகுக்களின் துறைகளிலும் அனைத்தையுமே ஆட்சி மேலிடம்தான் தீர்மானிப்பதால், ‘பதவி இருக்கு.. ஆனால் அதிகாரம் இல்லையே!’ எனக் குமுறுகிறார்கள். ‘எங்களுக்கு அதிகாரம் கொடுங்கள்’ எனக் கேட்டால், நம்மை மாற்றிவிடுவார்களோ என்ற அச்சமும் அவர்களுக்கு மேலோங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *