“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், “கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் தம்மைத் தவறான நோக்கத்துடன் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் (Collector had accused the MLA of making inappropriate advances and sending unwarranted messages) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் புகார் மூலம் இதுவரை பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வந்த இந்தச் சிக்கல் தொடர்பாகத் தெளிவு பிறந்துள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் செல்பேசி மூலம் தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், இரவில் முகாம் அலுவலகத்திற்குச் சென்றதாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த நிகழ்வு சுமார் இரு மாதங்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் போதிலும் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதும் இதே நிலைப்பாட்டையே தமிழக அரசு மேற்கொண்டது.