கள்ளக்குறிச்சி: நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்; இறுகிய பிடி… தவெக எம்எல்ஏ கைதில் நடந்தது என்ன?!

Spread the love

மேலும், அதிகாரியின் புகாரின் பேரில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியானது. BNS 75, 78, 79 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பாலியல் நோக்கமுள்ள இரட்டை அர்த்தப் பேச்சுகள் அல்லது கருத்துகள் தெரிவிப்பது. பெண் விருப்பமில்லை என்று தெளிவாகத் தெரிவித்த பிறகும் தொடர்ந்து பின்தொடர்வது. மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சிப்பது. இணையம், மின்னஞ்சல் அல்லது பிற மின்னணு தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பது. பெண்ணை அவமதிக்கும் நோக்கத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்துதல். பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அருள் விக்னேஷ் - விஜய்

அருள் விக்னேஷ் – விஜய்

இதற்கிடையே இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி. காமினி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் நேற்று முன்தினம் தனது விசாரணையை தொடங்கினார்.

கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்று பெண் கலெக்டரிடம் 1½ மணி நேரம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட உயர் அதிகாரிகளிடமும் அவர் விசாரணை நடத்தினார். இந்த வழக்கை கண்காணிக்கும் கண்காணிப்பு அதிகாரியான ஐ.ஜி காமினி நேற்று காலை 9.30 மணியளவில் கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார். தொடர்ந்து விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி. காமினி ஆகியோர் காலை 10 மணியளவில் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்குச் சென்றனர்.

தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி காமினி முன்னிலையில் மாவட்ட பெண் கலெக்டரிடம் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், தீவிர விசாரணை மேற்கொண்டார். இதில் செல்போனில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி என்ன? எம்.எல்.ஏ மூலம் கொடுக்கப்பட்ட தொந்தரவுகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு அதை அறிக்கையாக தயார் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணை மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து பெண் ஐஏஎஸ் அதிகாரியும் அவரது கணவரும் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணைக்குப் பின் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் எண்-1 சுவாதி அழகப்பனிடம் வாக்குமூலம் அளித்தனர். இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து நேற்று முன்தினமே எம்.எல்.ஏ கைது செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாயின. இருப்பினும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இன்று மாலை எஸ்.பி சிருஷ்டிசிங் தலைமையிலான போலீஸார், எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் இல்லத்திற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவரைக் கைது செய்து, தியாகதுருகம் பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்னர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *