திருப்பரங்குன்றம்: “சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?” – திருமா

Spread the love

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் தூண்

திருப்பரங்குன்றம் தூண்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், “நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?

இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது ‘ஈகோ’ பிரச்சினையாகக் கருதுகிறதா?

சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *