கள்ளக்குறிச்சி MLA வழக்கு: ” ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது?”- சீமான் | seeman about kallakurichi mla arul vignesh issue

Spread the love

பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்?

பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?

தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியரின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *