
மலர் தனியாக இருந்தால் அழகு: கோடி மலர் கொட்டி மாலையாகத் தொடுத்தால் பேரழகு முத்து தனியாக இருந்தால் ஒளி, ஆயிரம் முத்தை ஆரமாகத் தொடுத்தால் பேரொளி. வைரத் துண்டைத் தனியாகப் பார்த்தால் கண்ணைப் பறிக்கும்: நூறு வைரத் துண்டுகளை ஒன்றாகப் பதித்துப் பார்த்தால் கண்களே மின்னல்களாகும்.
தம்பி வைரமுத்துவின் கவிதை இன்பம் தருவது. இந்தக் கவிதைகளின் கூட்டம் பேரின்பத்தின் திரட்சியாய்த் திகழ்வது. தம்பி வைரமுத்துவின் ஒவ்வொரு சொல்லிலும் ஒரு சுகம் உண்டு; ஒவ்வொரு கவிதையிலும் ஓர் அகம் உண்டு; ஒவ்வொரு கவிதைத் தொகுதியிலும் நூறு முகம் உண்டு.
கற்பனைச் சிறகில் ஏறிக் கனவுலகின் எல்லாப் பரிமாணங்களையும் அளந்திட ஆசையா? சொல்லின் தோளேறி சுகானுபவங்களைச் சுவைத்திட எண்ணமா? அலைகளின் முதுகேறித் தொடுவானத்தைத் தொட்டிழுத்திடத் தோன்றுகிறதா? ஆகாயத்தின் மறுபக்கத்தையும் புரட்டிப் பார்த்திட ஆவலா? புயலின் கைத்தலம் பற்றிப் புத்துலக வாயிலில் நுழைந்திட வேண்டுமா?
தென்றலைத் துணைக்கழைத்துக் கொண்டு திக்குத் தெரியாத தென்றலைத் துவனாந்திரங்களில் ஒளியில் இருட்டையும், இருட்டில் ஒளியையும் கண்டு திளைத்திட வேண்டுமா? வாருங்கள் தம்பி வைரமுத்துவின் கவிதைவரிகளைப் பாருங்கள் இன்பம் பருகுங்கள்.
இயற்கையாகவே ஊறி வழிந்திடும் தனது உள்ளத்து உணர்வுகளினாலும், பன்னூல் புலமையினாலும், கற்ற கவிதையின் உள்ளடக்கம் எல்லாம் இயல்பாகவே கைவரப் பெற்றுவிட்டதால், தம்பி வைரமுத்துவின் கவிதை ஒவ்வொன்றிலும் உயிர்த்துடிப்பின் சீரான ஒலியை நாம் கேட்க முடிகிறது. ஒரே அவர் மனக்கண்ணிமையால் தடவிட நேரத்தில் மூன்று காலங்களையும் முடியும். அஃறிணை உயர்திணை என்ற வேறுபாடகற்றி உலகத்தின் சகல உயிர்களுடனும் அவரால் உறவு பேச முடியும்; பார்வையின் ஒரே வீச்சில் வானத்தையும் பூமியையும் அளந்திட முடியும்.
“அரும்பொன்று மலர்கின்ற நிமிஷம் தன்னில் அருகிருந்து தரிசிக்க வேண்டும்; அந்தச் சிறுமடல்கள் விரிகின்ற சின்னச் சப்தம் செவிமடலில் விழவேண்டும்;’
என்று மொட்டு மலரும்போது உண்டாகும் மெளன சப்தத்தைச் செவிமடுத்திட விரும்புகிறார்.
அதனால்தான் அவருக்கு,
“எண்ணங்கள் வான்நோக்கி உயர வேண்டும் எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும்”
என்றும்
“அழுதாலும் புல்லின் வேர் நனைய வேண்டும் பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்”
என்றும் மிக இலகுவாக எழுத முடிகிறது.
அதனால்தான் அவருக்கு ஓரிரு வரியில் ஒப்பற்ற காவியங்களைச் சரமாரியாக உருவாக்கிட முடிகிறது.
அலைகளே நீர்மேல் ஆடும் தண்ணீர் மலைகளே கடலின் மந்திரக் கைகளே
நீர்க் கயிறுகளே
தண்ணீர் வெடிகளே
காற்றால் எழுந்த கடல் வீக்கங்கள்
நீர்க் குருதி வற்றியதால் நிறம் வெளுத்த மேகங்கள்’
கள்ளலைகள் பாய்கின்ற கண்
சிந்தும் கண்ணீரைப் கைவரப் பெற்றுவிட்டதால், தம்பி வைரமுத்துவின் கவிதை ஒவ்வொன்றிலும் உயிர்த்துடிப்பின் சீரான ஒலியை நாம் கேட்க முடிகிறது. ஒரே நேரத்தில் மூன்று காலங்களையும் அவர் மனக்கண்ணிமையால் தடவிட முடியும். அஃறிணை உயர்திணை என்ற வேறுபாடகற்றி உலகத்தின் சகல உயிர்களுடனும் அவரால் உறவு பேச முடியும்; பார்வையின் ஒரே வீச்சில் வானத்தையும் பூமியையும் அளந்திட முடியும்.
மலர்கின்ற “அரும்பொன்று நிமிஷம் தன்னில் அருகிருந்து தரிசிக்க வேண்டும்; அந்தச் சிறுமடல்கள் விரிகின்ற சின்னச் சப்தம் செவிமடலில் விழவேண்டும்;”
என்று மொட்டு மலரும்போது உண்டாகும் மௌன சப்தத்தைச் செவிமடுத்திட விரும்புகிறார்.
அதனால்தான் அவருக்கு,
“எண்ணங்கள் வான்நோக்கி உயர வேண்டும் எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும்”
என்றும்
“அழுதாலும் புல்லின் வேர் நனைய வேண்டும் பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்”
என்றும் மிக இலகுவாக எழுத முடிகிறது.
அதனால்தான் அவருக்கு ஓரிரு வரியில் ஒப்பற்ற காவியங்களைச் சரமாரியாக உருவாக்கிட முடிகிறது.
அலைகளே நீர்மேல் ஆடும் தண்ணீர் மலைகளே கடலின் மந்திரக் கைகளே
நீர்க் கயிறுகளே
தண்ணீர் வெடிகளே
காற்றால் எழுந்த கடல் வீக்கங்கள்
நீர்க் குருதி வற்றியதால் நிறம் வெளுத்த மேகங்கள்
கள்ளலைகள் பாய்கின்ற கண்
சிந்தும் கண்ணீரைப் பிளந்து பார்க்கும் கவிஞர்கள்
கண்ணிலே ருசி வளர்க்கும் கனவுகள் என்னோடு மெழுகுவத்திகளும் அழுது கொண்டிருக்கும் இந்த மெல்லிய இரவில் என் மௌனம்தான் நான் உச்சரிக்கும் கனமான வார்த்தை” இவைபோல் எத்தனையோ புதுமைத் தொடர்கள். பத்துப் பருவங்களில் 4000 பாடல்களைக் கொண்ட வில்லிபாரதத்தை ஒரே வரியில் “ஒருத்தி சிரிக்கக்கூடாத இடத்தில் சிரித்துத் தொலைத்தாள் அதுதான் பாரதம்”- என்றும் பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆர்ண்யகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களில் 10,533 பாடல்களைக் கொண்டுள்ள கம்பாராமயணத்தை ஒரே வரியில் “ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பைத் தொலைத்தாள் அதுதான் ராமாயணம்” என்றும் திருவாரூர்த் தேரினை ஒரு தேன்துளிக்குள்ளே அடைத்திட முடியும் என்றும் நிருபித்துக் காட்டியுள்ளார்.
கம்பனால் கவிஞர் வைரமுத்துவைப் போல் கவிதை தொடுக்க முடிந்திருக்குமா? நிச்சயமாக முடிந்திருக்காது. அப்படிச் சொல்வதால் கம்பனின் கற்பனை வளத்தையும், கவிதைத் திறத்தையும் குறைத்து மதிப்பிடும் குறைமதி எனக்கில்லை. கம்பன் காலம் வேறு: அவனுக்கிருந்த வசதிகள் வேறு. வைரமுத்துவின் காலம் வேறு; அவருக்குள்ள வசதிகள் வேறானவை மட்டுமல்ல; அதிகமும் கூட வள்ளுவனின், இளங்கோவின், கம்பனின், பாரதியின், பாரதிதாசனின், கண்ணதாசனின் தாக்கமும், வீச்சும் கவிஞர் வைரமுத்துவிடம் இருக்கும்; இருக்க வேண்டும்; அவைதாம் வைரமுத்துவுக்குள்ள வசதிகள்.
இப்படித் தாக்கங்கள் இருப்பதாகச் சொல்வது இவரது தகுதியைக் குறைத்து மதிப்பீடு செய்வதாகாது. தலைமுறை தலைமுறையாகத் தழைத்து வருவது தமிழ், வாழையடி வாழையாக வளர்ந்து வருவது தமிழ்க் கவிதை. முதல் தலைமுறை நூறுமைல் தூரத்தைக் கடந்ததென்றால், இரண்டாந்தலைமுறை நூற்று ஓராவது மைவில் இருந்து தொடங்கி, முதல் தலைமுறையின் வேகத்தையும் விவேகத்தையும் உள்வாங்கிக் கொண்டதால் முந்நூறாவது மைல் வரை கடந்திட முடிந்தது.
முதல் தலைமுறையின் ஆற்றலும், அனுபவமும், இரண்டாவது தலைமுறைக்கு ஏவுதளமாக இயற்கையாகவே அமைந்துவிட்டது. இப்படிப் பன்னூறு தலைமுறைகளைக் கடந்து வந்ததால்தான் தமிழ் மொழி, எந்த மொழிக்கும் இல்லாத ஆழத்தையும் அகலத்தையும் உயரத்தையும் பெற்றுப் பிரமிக்கத்தக்க பெருமையுடன் நிலைத்து நிற்கிறது.
உலகத்தில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பொன்று தமிழுக்கு உண்டு. காலத்திற்கேற்ப காலத்தின் தேவைக்கேற்ப அந்தந்தக் காலத்துத் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உரிய எதிர்பார்ப்புகளுக்கேற்ப உணர்வுகளுக்கேற்ப உருமாற்றிக் கொள்ளும் உயிர்ப்புச் சக்தி தமிழுக்கு உண்டு. அதுமட்டுமல்ல, அவ்வப்போது தமிழ் தன்னை அரண்போலக் காத்து வளர்த்துக் கொள்ளத் தோதாகச் சில புரவலர்களைத் தோற்றுவித்துக் கொள்ளும். ஏதோ எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதைப்போல அவர்கள் தமிழை வளர்ப்பார்கள், தமிழ் அவர்களை வளர்த்துவிடும்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழ் வளர்ச்சிப் போக்கை உற்றுநோக்கினால், இந்தப் புனித ஏற்பாடு புரியும். அப்படித் தமிழால் தோற்றுவிக்கப்பட்ட காவல் அரண்களில் ஒன்றுதான் தம்பி வைரமுத்து என்று உறுதியாக என்னால் அறிவிக்க முடியும். அதனால்தான் பல தலைமுறைகளினால் பண்படுத்தப்பட்ட கழனி தம்பி வைரமுத்துவின் தொடக்க நிலைச் சொத்தாகி இருக்கிறது. தமிழ் செய்து கொண்டுள்ள ஏற்பாட்டின் இனிய உயிர் என்பதால் இயற்கையிலேயே அவரது கண்களில் சிறகுகள் முளைத்திருக்கின்றன. எழுத்துக்கள் பழுத்தே வருகின்றன.
மழைக்காலப்பூக்கள் என்னும் கவிதையில் கவிஞர் சொல்கிறார். அது கார்காலம்; மழைத்தூறல் நனைந்து கொண்டே செல்கிறார். வழியில் ஒரு மரம். மரத்தின் வழியே மழைத் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது. அதைக் கவிஞர் எப்படிப் பார்க்கிறார்.
“ஒரு மரம் அப்போது அது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருந்தது”
மாலை நேரம் அருவி ஓரம் அதை இப்படிப் பார்க்கிறார் கவிஞர்:
“மலையின் மார்பில் சுரக்கும் அருவி மசக்கையில் நடக்கும் மாலைத் தென்றல்
பிரசவ வலியில் சிவக்கும் கிழக்கு திறந்து கிடக்கும் ரகசிய வானம்” நதிக்கரையில் கவிஞர் நடந்து செல்லும்போது மொட்டுகள் மலர்கின்றன. அதை. “நதிக்கரையோரம் நடந்து போகிறேன் என் காலடிச் சத்தம் கண்டுகொண்டு ” மொட்டுகள் அலறியடித்து மலரகின்றன என்று அற்புதமாக வர்ணனை செய்கிறார். தம்பி வைரமுத்து, கம்பனைத் தாண்டி, பாரதியைத் தாண்டி, பாரதிதாசனைத் தாண்டி – அவர்களெல்லாம் இவரது கற்பனைக் கூட்டி நிழலாக நின்றிருப்பதால்தான் தண்ணீர் விழுதுகளையும், மொட்டுகள் அலறியடித்துக் கொண்டு மலர்வதையும், திறந்து கிடக்கும் வான இரகசியத்தையும் அவ்வளவு எளிதாக அவரால் ஊடுருவிப் பார்க்க முடிகிறது.
சங்ககாலம் தொடங்கி, புதுக்கவிதைக்காலம் வரை தமிழ் சாகரத்தில் பாய்ந்து நிரம்பி வழியும் நன்னீரைத் தனது நெஞ்சப் பைக்குள் நிறைத்துக் கொண்டதால் தான் தம்பி வைரமுத்து ‘ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து
என்று சங்ககாலப் பாடலைப் போலவும், “பொன்னங் கொடியென்பார் போதலரும் பூ வென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார்” என்று காவிய காலப் பாடலைப் போலவும், “ஏப்ரல் சூரியன் டீசல் புகை பேருந்து நெரிசல் அலுவலக எரிச்சல் இவையெதிலும் வாடாமல் பத்திரமாய் வைத்திருக்கிறேன் உனக்குத் தெரியாமல் உதிர்ந்து யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த உன் கருங்கூந்தற் சிறுபூவை” என்று புதுக்கவிதைக் காலப் பாடலைப் போலவவும் ஒரே நேரத்தில் எழுத முடிந்திருக்கிறது. 1954-இல் அதாவது தம்பி வைரமுத்து ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது, என்னுயிர நண்பர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த “மனோகரா” திரைப்படத்தில், தன் தந்தை புருஷோத்தமனைப் பார்த்து மனோகரன் பேசுவதாக ஒரு நீண்ட வசனம் அமைத்திருந்தேன்.
“பொன்னும் மணியும் மின்னும் வைரமும்
பூட்டி மகிழ்ந்து
கண்ணே முத்தே தமிழ்ப் பண்ணே என்றெல்லாம்
குலவிக் கொஞ்சி
தந்தத்தால் ஆன கட்டிலிலே சந்தனத் தொட்டிலிலே…”
என்று நதிபோல நடந்து செல்லும் அந்த வசனத்தில் இயல்பாகவே பொன்மணியையும் வைரமுத்தையும் இணைத்து எழுதியிருந்தேன்.
இது இயற்கையாக நடந்த ஒன்று, பின்னாளில் தங்கை பொன்மணியையும் தம்பி வைரமுத்தையும் பார்ப்போம் என்று கனவுகூட எட்டிப் பார்க்க முடியாத கட்டத்தில் எழுதப்பட்டது. ஆனால் இன்றைக்கும் அவ்விருவரையும் பார்க்கும்போதெல்லாம்: மனோகரா வசனவரிகள்: எனது நினைவின் கங்குகளில் யாருக்கும் தெரியாமல் நிழலாடுகின்றன.
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள், இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்; இவன் சொல் செவிவழி புகுந்து நெஞ்சப் பாதைக்குள் இறங்கும்போது நமது எடை கூடுகிறதே. “தம்பி தமிழ்க் கவிதைத் தும்பீ நீ புகழ் மலையின் உச்சிக்கே போய்விட்டாய் உன் அண்ணன் இதோ, உன்னைக்
கையசைத்து வாழ்த்துகின்றேன்”
மலர் தனியாக இருந்தால் அழகு; கோடி மலர் கொட்டி மாலையாகத் தொடுத்தால் பேரழகு. முத்து தனியாக இருந்தால் ஒளி; ஆயிரம் முத்தை ஆரமாகத் தொடுத்தால் பேரோளி துண்டைத் தனியாகப் பார்த்தால் கண்ணைப் பறிக்கும்; நூறு வைரத் துண்டுகளை ஒன்றாகப் பதித்துப் பார்த்தால் கண்களே மின்னல்களாகும். தம்பி வைரமுத்துவின் கவிதை இன்பம் தருவது. இந்தக் கவிதைகளின் கூட்டம் பேரின்பத்தின் திரட்சியாய்த் திகழ்வது. தம்பி வைரமுத்துவின் ஒவ்வொரு சொல்லிலும் ஒரு சுகம் உண்டு; ஒவ்வொரு கவிதையிலும் ஓர் அகம் உண்டு; ஒவ்வொரு கவிதைத் தொகுதியிலும் நூறு முகம் உண்டு.
கற்பனைச் சிறகில் ஏறிக் கனவுலகின் எல்லாப் பரிமாணங்களையும் அளந்திட ஆசையா? சொல்லின் தோளேறி சுகானுபவங்களைச் சுவைத்திட எண்ணமா? அலைகளின் முதுகேறித் தொடுவானத்தைத் தொட்டிழுத்திடத் தோன்றுகிறதா? ஆகாயத்தின் மறுபக்கத்தையும் புரட்டிப் பார்த்திட ஆவலா? புயலின் கைத்தலம் பற்றிப் புத்துலக வாயிலில் நுழைந்திட வேண்டுமா? தென்றலைத் துணைக்கழைத்துக் கொண்டு திக்குத் தெரியாத வனாந்திரங்களில் ஒளியில் இருட்டையும், இருட்டில் ஒளியையும் கண்டு திளைத்திட வேண்டுமா? வாருங்கள் தம்பி வைரமுத்துவின் கவிதைவரிகளைப் பாருங்கள் இன்பம் பருகுங்கள். இயற்கையாகவே ஊறி வழிந்திடும் தனது உள்ளத்து உணர்வுகளினாலும், பன்னூல் கற்ற புலமையினாலும், கவிதையின் உள்ளடக்கம் எல்லாம் இயல்பாகவே கைவரப் பெற்றுவிட்டதால், தம்பி வைரமுத்துவின் கவிதை ஒவ்வொன்றிலும் உயிர்த்துடிப்பின் சீரான ஒலியை நாம் கேட்க முடிகிறது.
ஒரே நேரத்தில் மூன்று காலங்களையும் அவர் மனக்கண்ணிமையால் தடவிட முடியும். அஃறிணை உயர்திணை என்ற வேறுபாடகற்றி உலகத்தின் சகல உயிர்களுடனும் அவரால் உறவு பேச முடியும்; பார்வையின் ஒரே வீச்சில் வானத்தையும் பூமியையும் அளந்திட முடியும். “அரும்பொன்று மலர்கின்ற நிமிஷம் தன்னில் அருகிருந்து தரிசிக்க வேண்டும்; அந்தச் சிறுமடல்கள் விரிகின்ற சின்னச் சப்தம் செவிமடலில் விழவேண்டும்;” என்று மொட்டு மலரும்போது உண்டாகும் மெளன சப்தத்தைச் செவிமடுத்திட விரும்புகிறார். அதனால்தான் அவருக்கு, “எண்ணங்கள் வான்நோக்கி உயர வேண்டும் எழுத்தெல்லாம் சுடராகி எரிய வேண்டும்” என்றும்
“அழுதாலும் புல்லின் வேர் நனைய வேண்டும் பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்” என்றும் மிக இலகுவாக எழுத முடிகிறது. அதனால்தான் அவருக்கு
ஓரிரு வரியில் ஒப்பற்ற காவியங்களைச் சரமாரியாக உருவாக்கிட முடிகிறது. அலைகளே நீர்மேல் ஆடும் தண்ணீர் மலைகளே கடலின் மந்திரக் கைகளே நீர்க் கயிறுகளே தண்ணீர் வெடிகளே காற்றால் எழுந்த கடல் வீக்கங்கள் நீர்க் குருதி வற்றியதால் நிறம் வெளுத்த மேகங்கள் கள்ளலைகள் பாய்கின்ற கண் சிந்தும் கண்ணீரைப் பிளந்து பார்க்கும் கவிஞர்கள் கண்ணிலே ருசி வளர்க்கும் கனவுகள் என்னோடு மெழுகுவத்திகளும் அழுது கொண்டிருக்கும் இந்த மெல்லிய
இரவில் என் மௌனம்தான் நான் உச்சரிக்கும் கனமான வார்த்தை” இவைபோல் எத்தனையோ புதுமைத் தொடர்கள். பத்துப் பருவங்களில் 4000 பாடல்களைக் கொண்ட வில்லிபாரதத்தை ஒரே வரியில் ஒருத்தி சிரிக்கக்கூடாத இடத்தில் சிரித்துத் தொலைத்தாள் அதுதான் பாரதம்” என்றும் பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணயகாண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களில் 10,533 பாடல்களைக் கொண்டுள்ள கம்பாராமயணத்தை ஒரே வரியில், “ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பைத் தொலைத்தாள் அதுதான் ராமாயணம்” என்றும் திருவாரூர்த் தேரினை ஒரு தேன்துளிக்குள்ளே அடைத்திட முடியும் என்றும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
கம்பனால் கவிஞர் வைரமுத்துவைப் போல் கவிதை தொடுக்க முடிந்திருக்குமா? நிச்சயமாக முடிந்திருக்காது. அப்படிச் சொல்வதால் கம்பனின் கற்பனை வளத்தையும், கவிதைத் திறத்தையும் குறைத்து மதிப்பிடும் குறைமதி எனக்கில்லை. கம்பன் காலம் வேறு. அவனுக்கிருந்த வசதிகள் வேறு. வைரமுத்துவின் காலம் வேறு; அவருக்குள்ள வசதிகள் வேறானவை மட்டுமல்ல: அதிகமும் கூட வள்ளுவனின், இளங்கோவின், கம்பனின், பாரதியின் பாரதிதாசனின், கண்ணதாசனின் தாக்கமும், வீச்சும் கவிஞர் வைரமுத்துவிடம் இருக்கும்; இருக்க வேண்டும்: அவைதாம் வைரமுத்துவுக்குள்ள வசதிகள். இப்படித் தாக்கங்கள் இருப்பதாகச் சொல்வது இவரது தகுதியைக் குறைத்து மதிப்பீடு செய்வதாகாது.
தலைமுறை தலைமுறையாகத் தழைத்து வருவது தமிழ் வாழையடி வாழையாக வளர்ந்து வருவது தமிழ்க் கவிதை. முதல் தலைமுறை நூறுமைல் தூரத்தைக் கடந்ததென்றால், இரண்டாந்தலைமுறை நூற்று ஓராவது மைலில் இருந்து தொடங்கி, முதல் தலைமுறையின் வேகத்தையும் விவேகத்தையும் உள்வாங்கிக் கொண்டதால் முந்நூறாவது மைல் வரை கடந்திட முடிந்தது.
முதல் தலைமுறையின் ஆற்றலும், அனுபவமும், இரண்டாவது தலைமுறைக்கு ஏவுதளமாக இயற்கையாகவே அமைந்துவிட்டது. இப்படிப் பன்னூறு தலைமுறைகளைக் கடந்து வந்ததால்தான் தமிழ் மொழி, எந்த மொழிக்கும் இல்லாத ஆழத்தையும் அகலத்தையும் உயரத்தையும் பெற்றுப் பிரமிக்கத்தக்க பெருமையுடன் நிலைத்து நிலைத்து நிற்கிறது.
உலகத்தில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பொன்று தமிழுக்கு உண்டு. காலத்திற்கேற்ப காலத்தின் தேவைக்கேற்ப – அந்தந்தக் காலத்துத் தமிழ் மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உரிய எதிர்பார்ப்புகளுக்கேற்ப உணர்வுகளுக்கேற்ப உருமாற்றிக் கொள்ளும் உயிர்ப்புச் சக்தி தமிழுக்கு உண்டு. அதுமட்டுமல்ல, அவ்வப்போது தமிழ்தன்னை அரண்போலக் காத்து வளர்த்துக் கொள்ளத் தோதாகச் சில புரவலர்களைத் தோற்றுவித்துக் கொள்ளும். ஏதோ எழுதப்படாத ஒப்பந்தம் ஏற்ப ட்டிருப்பதைப்போல அவர்கள் தமிழை வள-ர்ப்பார்கள்; தமிழ் அவர்களை வளர்த்துவிடும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழ் வளர்ச்சிப் போக்கை உற்றுநோக்கினால், இந்தப் புனித ஏற்பாடு புரியும். அப்படித் தமிழால் தோற்றுவிக்கப்பட்ட ஒன்றுதான் தம்பி வைரமுத்து என்று உறுதியாக என்னால் அறிவிக்க முடியும்.
காவல் அரண்களில் அதனால்தான் பல தலைமுறைகளினால் பண்படுத்தப்பட்ட கழனி தம்பி வைரமுத்துவின் தொடக்க நிலைச் சொத்தாகி இருக்கிறது. தமிழ் செய்து கொண்டுள்ள ஏற்பாட்டின் இனிய உயிர் என்பதால் இயற்கையிலேயே அவரது கணங்களில் சிறகுகள் முளைத்திருக்கின்றன. எழுத்துக்கள் பழுத்தே வருகின்றன. மழைக்காலப்பூக்கள் என்னும் கவிதையில் கவிஞர் சொல்கிறார் அது கார்காலம் மழைத்தூறல் நனைந்து கொண்டே செல்கிறார். வழியில் ஒரு மரம் மரத்தின் வழியே மழைத் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறது. அதைக் கவிஞர் எப்படிப் பார்க்கிறார்
“ஒரு மரம் அப்போது அது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருந்தது” மாலை நேரம். அருவி ஓரம் அதை இப்படிப் பார்க்கிறார் கவிஞர் “மலையின் மார்பில் சுரக்கும் அருவி மசக்கையில் நடக்கும் மாலைத் தென்றல் பிரசவ வலியில் சிவக்கும் கிழக்கு திறந்து கிடக்கும் ரகசிய வானம்” நதிக்கரையில் கவிஞர் நடந்து செல்லும்போது மொட்டுகள் மலர்கின்றன. அதை. “நதிக்கரையோரம் நடந்து போகிறேன் என் காலடிச் சத்தம் கண்டுகொண்டு மொட்டுகள் அலறியடித்து மலர்கின்றன என்று அற்புதமாக வரணனை செய்கிறார்.
தம்பி வைரமுத்து, கம்பனைத் தாண்டி பாரதியைத் தாண்டி, பாரதிதாசனைத் தாண்டி அவரகளெல்லாம் இவரது கற்பனைக் கூட்டி நிழலாக நின்றிருப்பதால்தான் தண்ணீர் விழுதுகளையும், மொட்டுகள் அலறியடித்துக் கொண்டு மலர்வதையும், திறந்து கிடக்கும் வான இரகசியத்தையும் அவ்வளவு எளிதாக அவரால் ஊடுருவிப் பார்க்க முடிகிறது. சங்ககாலம் தொடங்கி புதுக்கவிதைக் காலம் வரை தமிழ் சாகரத்தில் பாய்ந்து நிரம்பி வழியும் நன்னீரைத் தனது நெஞ்சப் பைக்குள் நிறைத்துக் கொண்டதால் தான் தம்பி வைரமுத்து ‘ஆற்றுத் தூறல் நீர் ஆரல் உண்டு குருகு பறக்கும் தீம்புனல் நாடன் கற்றை நிலவு காயும் காட்டிடை என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து” -என்று சங்ககாலப் பாடலைப் போலவும்.
“பொன்னங் கொடியென்பார் போதலரும் பூ வென்பார் மின்னல் மிடைந்த இடையென்பார்” -என்று காவிய காலப் பாடலைப் போலவும், “ஏப்ரல் சூரியன் டீசல் புகை பேருந்து நெரிசல் அலுவலக எரிச்சல் இவையெதிலும் வாடாமல் பத்திரமாய் வைத்திருக்கிறேன் உனக்குத் தெரியாமல் உதிர்ந்து யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த உன் கருங்கூந்தற் சிறுபூவை” என்று புதுக்கவிதைக் காலப் பாடலைப் போ-லவவும் ஒரே நேரத்தில் எழுத முடிந்திருக்கிறது. 1954-இல் அதாவது தம்பி வைரமுத்து ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது, என்னுயிர் நண்பர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த “மனோகரா” திரைப்படத்தில், தன் தந்தை புருஷோத்தமனைப் பார்த்து மனோகரன் பேசுவதாக ஒரு நீண்ட வசனம் அமைத்திருந்தேன்:
“பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே தமிழ்ப் பண்ணே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி தந்தத்தால் ஆன கட்டிலிலே சந்தனத் தொட்டிலிலே…”என்று நதிபோல நடந்து செல்லும் அந்த வசனத்தில் இயல்பாகவே பொன்மணியையும் வைரமுத்தையும் இணைத்து எழுதியிருந்தேன். இது இயற்கையாக நடந்த ஒன்று, பின்னாளில் தங்கை பொன்மணியையும் தம்பி வைரமுத்தையும் பார்ப்போம் என்று கனவுகூட எட்டிப் பார்க்க முடியாத கட்டத்தில் எழுதப்பட்டது.
ஆனால் இன்றைக்கும் அவ்விருவரையும் வசன பார்க்கும்போதெல்லாம்; மனோகரா வரிகள்; எனது நினைவின் கங்குகளில் யாருக்கும் தெரியாமல் நிழலாடுகின்றன.
இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள், இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்; இவன் சொல் செவிவழி புகுந்து நெஞ்சப் பாதைக்குள் இறங்கும்போது நமது எடை கூடுகிறதே
“தம்பீ தமிழ்க் கவிதைத் தும்பீ
நீ புகழ் மலையின் உச்சிக்கே போய்விட்டாய் உன் அண்ணன் இதோ, உன்னைக் கையசைத்து வாழ்த்துகின்றேன்”