காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி… மகன் அர்ஜுனைப் பாராட்டி நெகிழ்ந்த சச்சின்!

Spread the love

மகனுக்காக உருகிய தந்தை!

அர்ஜுனின் இந்த சிறப்பான தொடக்கத்தைக் கண்டு பெருமைப்பட்ட சச்சின், தனது X பக்கத்தில் உணர்ச்சிகரமான ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “நன்றாகச் செய்தாய் அர்ஜுன். இந்த சீசன் முழுவதும் நீ உன்னை வழிநடத்திய விதம் பெருமையளிக்கிறது. உன் திறமை மீது நீ வைத்திருந்த நம்பிக்கை, பொறுமை, அமைதியாகக் காத்திருந்து கடினமாக உழைத்தது, கடைசிப் போட்டி வரை வாய்ப்புக்காகக் காத்திருந்தபோதும் நேர்மறையாக இருந்தது என அனைத்தும் பாராட்டுக்குரியது,” என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், “கிரிக்கெட், திறமையை சோதிப்பது போலவே பொறுமையையும் சோதிக்கும். இன்று இரண்டையும் நீ சிறப்பாகக் கையாண்டாய். எப்போதும் போல் ஆட்டத்தின் மீது காதல் கொண்டு, அடக்கத்துடன் பயணத்தைத் தொடர்வாயாக. எப்போதும் என் அன்பு உனக்கு உண்டு,” என்று தனது வாழ்த்தையும், அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

புதிய அணி, புதிய தொடக்கம்!

2026 ஐபிஎல் தொடர் அர்ஜுனுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சீசனாகும். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த அவர், இந்த ஆண்டுதான் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். லக்னோ அணி பிளேஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், தொடரின் கடைசி லீக் போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த ஒரே வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தனது திறமையை நிரூபித்துள்ளார் அர்ஜுன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *