Ram Charan: 'எது பும்ரா ஃபுட்பால் ப்ளேயரா?'; வைரலான காணொளி – மன்னிப்புக் கேட்ட ராம் சரண்!

Spread the love

ராம் சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பெத்தி’ திரைப்படம் ஜூன் 4-ம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தின் ஈவென்ட் சமீபத்தில் நடந்திருந்தது. இந்த நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, தோனி ஆகியோர் குறித்து ஒரு வரியில் பதில் சொல்லியிருந்தார்.

ராம் சரண் - பெத்தி திரைப்படம்
ராம் சரண் – பெத்தி திரைப்படம்

அந்த வரிசையில், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை, கால் பந்து வீரர் எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி ட்ரால் செய்யப்பட்டது.

இந்நிலையில் ராம் சரண், மாற்றி சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “எனக்குச் சில நேரங்களில் பெயர்கள் நிஜமாகவே மறந்துவிடுகிறது. ஜஸ்பிரித் பும்ரா ஜி, இந்தத் குளறுபடிகளுக்கு என்னை மன்னித்துவிடுங்கள்.

ஒட்டுமொத்தக் கூட்டத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் மத்தியில் ஏற்பட்ட ஒரு சாதாரண மனிதத் தவறுதான் இது உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, நான் உங்கள் விளையாட்டின் மிகப்பெரிய ரசிகன்.

நீங்கள் தொடர்ந்து பேட்ஸ்மேன்களைப் திணறடிக்கும் போதெல்லாம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச் செய்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

இப்படத்தில் ஜான்வி கபூர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டோலிவுட் இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *