காரணமே இல்லாம உடல் எடை குறையுதா… இதையெல்லாம் கவனிச்சீங்களா? | Unexplained weight loss… Have you noticed these

Spread the love

முதியவர்கள் (65 வயதிற்கு மேல்): இந்த வயதில் பத்தில் ஒரு நபர் புற்றுநோய் காரணமாக எடை இழக்கலாம். மாரடைப்பு காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இதயத் தசை வலுவிழந்து ரத்தத்தைப் பாய்ச்ச முடியாத நிலை (heart failure) மற்றும் அதிகமாகப் புகைபிடித்ததால் நுரையீரல் பிரச்னைகள், அதிகமாக மது குடித்து கல்லீரல் கெட்டுப்போவது, பற்கள் விழுந்துவிட்ட காரணத்தினால் நன்றாகக் கடித்துச் சாப்பிட முடியாத நிலை, மறதி நோய் (dementia) காரணமாகப் பசியின்மை, கணவனையோ அல்லது மனைவியையோ இழந்து சமூகத்தில் தனிமைப்படுத்தப்படுதல், சில மருந்துகளின் பக்கவிளைவுகள் (side effects) போன்றவையும் எடை குறையக் காரணங்களாக இருக்கலாம்.

எளிதாகப் புரிந்து கொள்வதற்காக எடை இழப்பு காரணங்களை வயதிற்கேற்ப வகைப்படுத்தியிருந்தாலும், சில காரணங்கள் எல்லா வயதிலும் ஏற்படக்கூடியவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். திடீரென்று வறுமை நிலைக்குப் போவதால் எல்லா வயதிலும் எடை இழப்பு ஏற்படலாம்.

வளர்ந்துவிட்ட பணக்கார நாடுகளில் காணப்படும் “அனோரெக்ஸியா நெர்வோசா’ (Anorexia nervosa) என்னும் உணவுப்பழக்க நோய் 13, 14 வயதுப் பிள்ளைகளிடம் காணப்படுகிறது.

தற்போது உலகமயமாக்கம் ஆகிவிட்ட காரணத்தினாலும் மேலை நாடுகளின் கலாசாரத் தாக்கத்தினாலும் இந்தியக் குழந்தைகளிடமும் இது ஆங்கங்கே பணக்கார வீடுகளில் காணப்படுகிறது.

65 வயதிற்கு மேல் பத்தில் ஒரு நபர் புற்றுநோய் காரணமாக எடை இழக்கலாம்.

65 வயதிற்கு மேல் பத்தில் ஒரு நபர் புற்றுநோய் காரணமாக எடை இழக்கலாம்.
Pixabay

திட்டமிடப்படாத உடல் எடைக்குறைவு ஏற்பட்டால் நீங்கள் ஒரு மருத்துவரை அவசியம் பார்க்க வேண்டும். மருத்துவர் வயதிற்கேற்ப சில பரிசோதனைகளை மேற்கொள்வார். முக்கியமாக ரத்தம், மலம், சிறுநீர் மற்றும் மார்பு எக்ஸ்ரே போன்றவற்றைச் செய்வார்.

மேலும், முழு உடலுக்கான சிடி ஸ்கேன் பரிசோதனைகள் தேவையா என்பதை மருத்துவர் கணித்து அறிவுறுத்துவார். வயதானவர்களுக்குக் குடல் புற்றுநோய் ஏதும் இருப்பதாகச் சந்தேகித்தால் ஒரு மெல்லிய குழாயில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் இரைப்பையையும் பெருங்குடலையும் சோதிக்கும்  (Gastroscopy, Colonoscopy) பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.

திட்டமிடப்படாத உடல் எடைக்குறைவு என்ன செய்யும் என்பது அதன் அடிப்படைக் காரணத்தைப் பொறுத்திருக்கிறது. முதியவர்களிடம் புற்றுநோய் அதிகமாகக் காணப்பட்டாலும், மற்ற பெரும்பான்மையான காரணங்கள் ஆபத்தற்றவையாகவோ அல்லது சிகிச்சை அளிக்கக்கூடிய நாள்பட்ட நோய்களாகவே உள்ளன. 

இங்கே கூறப்பட்டுள்ள கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் நீங்கள் புரிந்து கொள்வதற்காக மட்டுமே. எந்தச் சிகிச்சையையும் நீங்கள் நல்ல மருத்துவரைப் பார்த்தே செய்து கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களைப் படித்துவிட்டு மருந்துக்கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுவதோ இல்லை நீங்களாகவே பரிசோதனைகள் செய்து கொள்வதோ கூடாது.

டாக்டர் பாஸ்கர்:

இங்கிலாந்தில் 22 வருடங்களாக குடும்பநல மருத்துவராகப் பணிபுரிந்து வருபவர். தமிழ்நாட்டில் MBBS, MD படித்துவிட்டு இங்கிலாந்தில் MRCGP பட்டம் முடித்திருப்பவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *