294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.
வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 29 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை மே-4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல்.20) மேற்கு வங்க மாநிலத்தில் ஜர்கிராம் நகரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி சாலையோரம் இருக்கக்கூடிய கடைக்கு சென்று காரப்பொரி வாங்கி சாப்பிட்டார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்தச் செயலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்திருக்கிறார்.