“If the children of politicians can enter politics, why shouldn’t the children of judges?” asks a female judge.-அரசியல்வாதி வாரிசுகள் அரசியலுக்கு வரும்போது நீதிபதியின் பிள்ளைகள் வரக்கூடாதா? பெண் நீதிபதி கேள்வி

Spread the love

வழக்கு தொடுப்பவர் நீதித்துறையையே விசாரணை முன்பு நிறுத்தியுள்ளார். இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான பாதையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

நீதிபதி ஸ்வர்னா ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததை கெஜ்ரிவால் சுட்டிக்காட்டி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள நீதிபதி ஸ்வர்னா, “அந்த நிகழ்ச்சிகள் புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் மகளிர் தின நிகழ்வுகள் குறித்த நிகழ்ச்சிகளாகவோ, அல்லது இளம் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடுவதற்கான நிகழ்வுகளாகவோ இருந்தன. பல நீதிபதிகள் அந்நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர். இத்தகைய பங்கேற்பை, ஏதேனும் ஒரு சித்தாந்தச் சார்பாக குறிப்பிட இயலாது.

இவ்வழக்கில் இருந்து நான் விலக வேண்டும் என்ற இந்த மனுவானது ஒரு “Catch-22” (சிக்கலான இருதலைக்கொள்ளி) சூழலை உருவாக்கி இருக்கிறது. இவ்வழக்கில், நான் விலகினாலும் சரி அல்லது விலகாவிட்டாலும் சரி எந்நிலையிலும் கேள்விகள் எழும் வகையிலான ஒரு சூழலில் நான் நிறுத்தப்பட்டுள்ளேன். மனுதாரர் (கேஜ்ரிவால்) தனக்குச் சாதகமான, ‘எப்படிப் பார்த்தாலும் தனக்கே வெற்றி’ எனும் ஒரு சூழலை உருவாக்கிக்கொள்வார்.

இவ்வழக்கிலிருந்து நான் விலகிக்கொண்டால், எவ்வித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளுக்கு அது முக்கியத்துவம் அளிப்பதாக அமையும். விசாரணையிலிருந்து விலகிக்கொள்ளும் அந்த எளிதான பாதையானது, அமைதியாக இதிலிருந்து வெளியேறுவதாகும். அதேவேளையில், ஊடகங்கள் பொறுப்புணர்வு ஏதுமின்றி அவதூறு பரப்பும்” அவர் கவலை தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *