காற்றினிலே வரும் கீதம்… | My vikatan article about Singer Janaki

Spread the love

‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற குரல் திரை உலகில் காலெடுத்து வைத்த ’16 வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப் பூவே செந்தூரப் பூவே ஜில்லென்ற காற்றே என் மன்னன் எங்கே’ பாடல் பட்டி தொட்டிகளில் எல்லாம் இவர் குரல் ஒலிக்க ஆரம்பிக்க…படம் சூப்பர் ஹிட்டானது. அவருக்கு தேசிய விருது வாங்கித் தந்தது.

“இஞ்சி இடுப்பழகா..” பாடல் நம்மை இன்னொரு தளத்திற்கு கடத்திச் செல்லும். கதாநாயகனோடு திடீர் திருமணம் நடந்த அதிர்ச்சியில் இருக்கும் மணப்பெண் தனது முதல் இரவில் பாடும் பாடல் இது. அழகாக மயிலிறகால் வருடுதல் போன்ற உணர்வை ஏற்படுத்திய பாடல். இந்த பாடல் மீண்டும் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

ஜானகி அவர்கள் மாஸாகவும் பாடுவார். கிளாஸாகவும் பாடுவார். ஒரு சிலரால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதில் முதன்மையானவர் திருமதி ஜானகி அவர்கள். ‘டாடி, டாடி ஓ மை டாடி’ என்று குழந்தையாகவும் பாடுவார். ‘போடா போடா பொக்க எள்ளு காட்டுக்கு தெக்க..’ என்று வயதான குரலிலும் பாடுவார்.

ஜானகி மறைவு

ஜானகி மறைவு

இன்று அவர் நம்மிடையே இல்லை. காற்றோடு கலந்து விட்டார். நம் காதுகளை கூர்மையாக வைத்துக் கொண்டு கேட்டால்… “காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே…” “கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்..” “காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி” ஜானகி அவர்கள் பாடிய பாடல்கள் காற்றில் கலந்து வந்து ஒலிக்கும். நம்மை மறந்து ரசிப்போம். இதுதான் தியான நிலை. நம் மனதிற்கு அமைதியை தரும் நிலை.

“நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா… உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே…”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *