‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ ஹீரோ ரியோ ராஜா? வெளியான புதிய அப்டேட்! – Kumudam

Spread the love

2023 ல் அவர் திரையுலகில் மிகவும் பரீச்சையமான நடிகராக மாற  “ஜோ”  திரைப்படம் தான் காரணம் . இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக காதலர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் சினிமா திரையுலகில் ரியோ ராஜ்க்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் அதிகமாக ஏற்பட தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆண்பாவம் பொல்லாதது ஆகிய காதல் நகைச்சுவைப் படங்களில் நடித்த வந்தார்.  

தற்போது பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படமான வருத்தப்படாத வாலிபர் சிங்கம் பாகம் 2ல் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக தற்போது ரியோராஜ் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்” சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. டி. இமான் இசையமைத்திருந்த இப்படத்தின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஊதா கலரு ரிப்பன்’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றன. இந்த படம், சிவகார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் தனி வரவேற்பை ஏற்படுத்திய முக்கிய படமாகவும் அமைந்தது.

இதற்கிடையில், இயக்குநர் பொன்ராம் சமீபத்தில் அளித்த பேட்டியில் , ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ திரைப்படத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இந்த நிலையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் ரியோ ராஜ், தனது ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிப்பதுடன், கதாநாயகனாகவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முதல் பாகத்தை இயக்கிய பொன்ராம், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருத்தபடாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு காம்பேக் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாகம் 2 ரியோ ராஜ்க்கு நல்ல ஒரு திரைப்படமாக அமையும் என்று எந்வொரு சந்தேகமும் இல்லை. இந்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இதற்கிடையில், ரியோ ராஜ் நடித்துள்ள ‘ராம் லீலா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல், தனது ரிவர்ரூட் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘பிரவுன் மணி’ என்ற புதிய திரைப்படத்தையும் அவர் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *