காற்றை திசைமாற்றிய கருணாகரப் பெருமான்… சூறாவளியிலும் பக்தர்களைக் காத்த சிவன்! – Kumudam

Spread the love

அகம் நிறைந்த பக்தியுடன் தன்னை வணங்கிய அடியவர்க்கெல்லாம் ஆண்டவன் தரிசனம் தந்ததாக ஏராளமான புராணக் கதைகள் உண்டு. அப்படி இறைவன் தோன்றிய இடங்களில் எல்லாம் பிற்காலத்தில் கோயில்கள் அமையும். இறைவன் அங்கே எழுந்தருளி காலம்காலமாக பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
அந்தவகையி அகத்திய முனியின் ஆராதனையை ஏற்றிட எம்பெருமான் ஈசன், பூமிக்குள் இருந்து தானாகவே தோன்றிய தலம், குலவணிகர்புரம்.
துர்வாச முனிவருக்கும் அஜமுகி என்ற அரக்கிக்கும் பிறந்தவர்கள் வில்வலன், வாதாபி என்ற அசுரர்கள்.

இவர்கள், தந்தையின் மீது உள்ள கோபத்தால், தாயின் பேச்சைக் கேட்டு முனிவர்களை தந்திரத்தால் கொன்று வந்தனர். அகத்தியர் தென்திசை வந்தபோது அரக்கர்களின் அட்டூழியத்தைக் கேள்விப்பட்டார். இறைவன் அருளாலும் தமது அறிவாலும் அரக்கர்கள் இருவரையும் அழித்தார். அரக்கர்கள் என்றாலும், அகத்தியருக்கு தோஷம் பற்றியது.

தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்க என்ன வழி என்று அகத் தியர், நாரதரிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு நாரதர், “முனிவரே, நீங்கள் சிவ வழிபாடு செய்தால் உங்கள் தோஷம் நீங்கும் அதேசமயம், வழிபாட்டுக்கான சிவலிங்கத்தை நீங்கள் உருவாக்கக் கூடாது. எந்தத் தலத்தில் நீங்கள் சந்தியாவந்தனம் செய்யும்போது, உங்களுக்காக ஒரு சிவலிங்கம் பூமியில் இருந்து வெளிப்படுகிறதோ, அங்கே அமர்ந்து, தானாகத் தோன்றிய அந்த சிவலிங்கத்தை 41 நாட்கள் பூஜை செய்து வழிபட்டால் உமது தோஷம் நீங்கும்” என்றார். நாரதரின் அறிவுரைப்படை அகத்தியர் பல தலத்திற்கும் சென்று மாலை வேளையில் சந்தியாவந்தனம் பிரகாசமான ஒளி தோன்றியது. அதைத் தொடர்ந்து, சுயம்பு மூர்த்தமாக சிவலிங்கம் ஒன்று மேலெழுந்து வந்தது.

மகிழ்ச்சி அடைந்த அகத்தியர், ஈசனை நினைத்து தியானித்து 41 நாள்கள் பூஜை செய்தார். சிவலிங்கம் தானாகத் தோன்றியதால், தான்தோன்றியப்பர் என்ற திருநாமம் சூட்டி வணங்கினார். 41 ஆவது நாள், அகத்தியருக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கியது. இனி, இங்கு கோயில் கட்டப்பட்ட வரலாற்றைக் காண்போம். பாண்டியர்கள் காலத்தில் வணிகர்கள் பலர் இப்பகுதியில் தங்கியிருந்து தானியங்கள், வாசனைப் பொருள்கள், மளிகை பொருட்கள், காய், கனிகள் போன்றவற்றை வியாபாரம் செய்து வந்தனர். இரவு நேரங்களில் பொருள்களை பாய் மற்றும் ஓலைகளால் மூடிவிட்டு அங்கேயே தங்கினார்கள்.

ஒருமுறை அப்பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசத்தொடங்கியது. விற்பனைக்கு வைத்திருந்த பொருள்கள் எல்லாம் காற்றில் பறக்கத் தொடங்க, தங்கள் பொருள்களை காப்பாற்றிக்கொள்ள இயலாமல் தவித்த வணிகர்கள், “ஈசனே, தான்தோன்றியப்பா! நீதான் எங்கள் வியாபாரப் பொருள்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று மனம் உருகி வேண்டினர்.

அடுத்த கணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. சந்தை போல இருந்த அப்பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த எந்த ஒரு பொருளுக்கும் சேதம் ஏற்படாமல் அப்பகுதியில் மட்டும் காற்று அமைதியாகி, மற்ற இடங்களில் சுழன்று வீசியது. இறைவனின் கருணையை நினைத்து நெகிழ்ந்த வணிகர்கள், மறுநாள், கோயிலுக்குச் சென்றனர் “தான்தோன்றியப்பர் சூறாவளிக் காற்றைத் தடுத்து திசைமாற்றி எங்களைக் காப்பாற்றினார். எங்கள் குலதெய்வம் இவர் தான்!” என்று கூறி வணங்கினார்கள்.

‘எங்கள் குலத்தைக் காத்திட்ட தான்தோன்றியப்பருக்கு பாண்டிய மன்னர்கள் உதவியால் கற்கோயில் கட்டுவோம்.” என்றும் கூறினார்கள். சில நாள்களுக்குப் பின், பாண்டியமன்னன்  சீமாற சீவல்லபனின்  இரு மகன் இரண்டாம் வரகுண பாண்டியன் திருச்செந்தூர் செல்லும் வழியில் தன் படைகளுக்காக தானியங்கள் வாங்க அவர்கள் கூறியபடி இப்பகுதிக்கு வந்தார். அப்போது வணிகர்களை சந்தித்தார். தான்தோன்றியப்பருக்கு பெரும் கற்கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வித்தார். அதோடு, இப்பகுதிக்கு குலவணிகர்புரம் என்ற பெயரையும் வைத்தார். வணிகர்கள் இப்பகுதியில் வியாபாரம் செய்ய உள்ள வரியை முழுமையாக நீக்கினார்.
நெல்லை பாளையங்கோட் வணிகர்புரம் சாலையில் இரு தொலைவில்  கோயில் மேலும், முருகப்பெருமான் மீது அதிக பக்தி கொண்ட அப் பாண்டிய மன்னன் செந்தூர் கோயிலுக்கு 1400 பொற்காசுகளை வழிபாட்டிற்கு என கொடுத்தார். மேற்கண்ட செய்திகள் திருப்புறம்பியம் கோயில் கல்வெட்டுகளில் உள்ளன.

இனி கோயிலுக்குள் செல்வோம். ஊரின் நடு மையத்தில் வடபகுதியில் கோயில் உள்ளது. பாண்டிய மன்னன் கட்டிய கோயில் அந்நியப் படையெடுப்பால் கருவறை கற்சுவர்கள் தவிர முழுமையாக இடிக்கப் பட்டு வழிபாடுகளும் இன்றிப் போனது. 1956ஆம் ஆண்டுக்குப் பிறகு சிவன், அம்பிகை சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். பாழடைந்திருந்த கோயிலை 10 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பகுதி பக்தர்கள் ஒன்று கூடி சீரமைத்தனர். சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி உள்ளிட்டவை சீர்செய்யப்பட்ட சமயத்தில், கோஷ்டத்தில் இருந்த தக்ஷிணாமூர்த்தி சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவே தனி சன்னதிக்கு வந்து விட்டார். 

உள் பிரகாரத்தில் சூரியன், சந்திரன், கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், சனிபகவான், நவகிரகங்கள் உள்ளனர். கருவறையில் சிவலிங்க வடிவில் தான்தோன்றியப்பர் சதுர ஆவுடையோடு காட்சி தருகிறார். தானாகவே தோன்றியவர். பக்தர்கள் அழைத்ததும் உடனே வந்து காப்பாற்றியவர். வணங்கும்போதே மனதுக்குள் நிம்மதி நிறைகிறது. அம்பிகை தனிசன்னதியில் சிவகாமி அம்பாள் என்ற திருப்பெயருடன், கருணை முகத்தோடு நின்று கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சர்வ மங்களங்களும் சேரும் என்பது நம்பிக்கை.

தை மாதம் வருஷாபிஷேகம், சித்ரா பெளர்ணமியில் திருவிளக்கு பூஜை, ஐப்பசியில் திருக் கல்யாணம், ஆனித் திருமஞ்சனம் ஆகிய விழாக்கள் இங்கே நடைபெறுகின்றன. திருமண தடை உள்ளவர்கள் ஏழு பிரதோஷ தினங்களில் இங்கே வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வணிகர்களைக் காத்தவர் என்பதால், இன்றும் வணிகர்கள் பலர், தங்களின் விற்பனை சிறக்க இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *