காவிரி விவகாரம்: “தனக்குத் தானே பட்டம் சூட்டி கொண்ட தாய்மாமா என்ன செய்யப் போகிறார்?”- எடப்பாடி காட்டம்| admk edappdi palanisamy slams tvk govt for mekedatu issue

Spread the love

கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கும் படி மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியிருக்கிறார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், மேகதாது விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியிருப்பதாகவும், தமிழக எல்லைக்கு மிக அருகிலேயே, அதாவது மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த மேகதாது அணை அமையவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

டி.கே சிவக்குமார்

டி.கே சிவக்குமார்
ANI

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கர்நாடக முதல்வரைப் பார்த்து பயமா..? தனக்குத் தானே பட்டம் சூட்டி கொண்ட தாய் மாமா என்ன செய்யப் போகிறார்?

மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்தச் செய்தியும் வரவில்லை. கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *