கிடுகிடுவென குறைந்த தங்கம் விலை….இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? – Kumudam

Spread the love

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,560 குறைந்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை

கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. ஆனால், நவம்பர் மாதம் தொடங்கியதும் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. இதனால் நகை வாங்குவோர் கவலையடைந்தனர்.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.13,015-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளிக் கட்டியின் விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,00,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே நாளில் தங்கம், வெள்ளி என இரண்டின் விலையும் கணிசமாகக் குறைந்திருப்பது நகை வாங்கக் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *