பண்ணூன் வழக்கு: இந்திய அரசுக்கு அமெரிக்கா நீதிமன்றச் சம்மன் – இந்தியா குற்றச்சாட்டை மறுப்பு|Ajit Doval Named in Pannun Lawsuit: India’s Response

Spread the love

நிகில் குப்தா…

பண்ணூன் வழக்கில் நிகில் குப்தா 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் ப்ராக்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

இந்த வழக்கில் கூலிக்கு ஆள் அமர்த்தி கொலை செய்ய முயன்றது, கொலை சதி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்ற சதி உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை 2026-ம் ஆண்டு பிப்ரவரியில் குப்தா ஒப்புக்கொண்டார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்

ரந்தீர் ஜெய்ஸ்வால்

இப்போது என்ன?

பண்ணூன் வழக்கு சம்பந்தமாக அமெரிக்க வெளியுறவுத் துறை 2026-ம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று கையெழுத்திடப்பட்ட தூதரகக் குறிப்பை 2026-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பியது.

பின்னர், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சம்மன் அனுப்பப்பட்டதை அமெரிக்க வெளியுறவுத் துறை அக்டோபர் 28-ம் தேதி உறுதிப்படுத்தியது.

இந்தியத் தூதரகத்திற்கு அமெரிக்க வெளியுறவுத் துறை இந்தத் தூதரகக் குறிப்பை அனுப்பியது ஒருவித நடைமுறைதான்.

இந்தக் குறிப்பை அனுப்பியதன் மூலம், நடைபெற்று வரும் இந்த உரிமையியல் வழக்கில் தான் எந்தவொரு குறிப்பிட்ட நிலையையும் எடுக்கவில்லை என்பதை அமெரிக்க வெளியுறவுத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *