மாந்திரீகம்.. உளுந்தூர்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் மர்மமான பொருட்கள்.. பொதுமக்கள் பீதி! | Mysterious Occult Items Found Across Ulundurpet Town Spark Public Alarm

Spread the love

Tamilnadu

oi-Vignesh Selvaraj

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் மர்மமான முறையில் மாந்திரீகப் பொருட்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவுசார் மையம் அருகே தேங்காய் உடைத்து, தாலி கட்டி, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வைத்துச் சென்றதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அருகே மர்மமான முறையில் மாந்திரீகம் செய்ததுபோல் பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தேங்காய் உடைக்கப்பட்டு, ஆவாரம்பூச் செடியில் தாலி கட்டி, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டுள்ளதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியும் பீதியும் அடைந்துள்ளனர்.

Mysterious Occult Items Found Across Ulundurpet Town Spark Public Alarm

இதற்கு முன்னதாக, உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் மற்றும் அன்னை சத்யா தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் சில வாரங்களுக்கு முன்பு மண்டை ஓடு உள்ளிட்ட பொருட்களை வைத்து மர்மமான முறையில் மாந்திரீகம் செய்ததுபோல் காணப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதேபோன்று திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள பூங்கா பகுதியிலும் இத்தகைய மர்மச் செயல்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

உளுந்தூர்பேட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று மர்மமான முறையில் பொருட்களை வைத்துச் செல்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் இவற்றைப் பார்த்து அச்சமடைந்து வருவதுடன், இத்தகைய செயல்கள் எதற்காக யாரைக் குறிவைத்தும் செய்யப்படுகின்றன என்ற பல்வேறு சந்தேகங்களும் பொதுமக்களிடையே எழுந்துள்ளன.

எனவே, நகரின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *