கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பிரக்ஞானந்தா: முதல் இந்தியர் என்ற சாதனை|Praggnanandhaa Defeats Caruana to Win Grand Chess Tour Crown

Spread the love

அமெரிக்காவில் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் பிரக்ஞானந்தா.

இந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற சாதனையும் பிரக்ஞானந்தாவிற்குச் சேர்ந்திருக்கிறது.

அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஃபேபியானோ கருவானாவை 15-13 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த வெற்றியைத் தட்டியுள்ளார் பிரக்ஞானந்தா.

இறுதிப் போட்டியின் தொடக்கம் பிரக்ஞானந்தாவிற்குச் சாதகமானதாக இருந்திருக்கவில்லை. அவர் அப்போது கருவானாவை விட 6 புள்ளிகள் பின்தங்கியே இருந்திருக்கிறார்.

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

இந்த நிலையில், கருவானாவுக்கு எதிரான இரண்டு ரேபிட் போட்டிகளில் வெற்றி பெற்று, தனக்கும் அவருக்குமான புள்ளி வித்தியாசத்தைப் பிரக்ஞானந்தா முதலில் சமன் செய்திருக்கிறார்.

அடுத்து நடந்த நான்கு பிளிட்ஸ் சுற்றுகளில் சிறப்பாக விளையாடி வெற்றியைத் தன் வசமாக்கியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தாவிற்கு 2,00,000 டாலர் (சுமார் ரூ.1.91 கோடி) பரிசுத்தொகை கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துள்ளார் பிரக்ஞானந்தா.

வாழ்த்துகள் பிரக்ஞானந்தா!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *