கிருஷ்ணகிரி: ஜாம்பவான்களைக் காலி செய்த தவெக ‘வழக்கறிஞர்’ – நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்! | krishnagiri TVK mla family interview

Spread the love

முகுந்த் வெறும் ஓட்டு மட்டும் கேட்கவில்லை; பிரச்சாரத்தின் போதே ஒரு வழக்கறிஞராகத் தனது திறமையை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தினார்.

பல கிராம மக்களுக்குத் தங்களுக்குரிய அரசுத் திட்டங்கள் என்னவென்றே தெரியவில்லை என்பதைப் பிரச்சாரத்தின் போது உணர்ந்த முகுந்த், உடனடியாக ஒரு வழக்கறிஞரை நியமித்து மக்களுக்கு அந்தத் திட்டங்களை விளக்கிக் கூறி, அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் புரிய வைத்தார்.

இதுவே மக்கள் மத்தியில் அவர் மேல் ஒரு தனி மரியாதையையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

​மல்லிகைப் பூ விவசாயிகளுக்கான பிளான்!

தொகுதி மக்கள் முன்வைத்த பல கோரிக்கைகளைக் கேட்டறிந்த முகுந்த், “நான் ஜெயித்தால் முதலில் அடிப்படை வசதிகளைச் சரிசெய்வேன்” என உறுதியளித்தார். குறிப்பாக, கிருஷ்ணகிரி மல்லிகைப் பூ விவசாயிகளுக்காக நறுமணத் தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற வாக்குறுதி விவசாயிகளிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதுதவிர சாலை, கழிவறை மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற அடிப்படைத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் செய்து தருவதாக வாக்களித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *