கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முருகன்(45) அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

அங்குள்ள பள்ளியில், 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடந்த 1-ம் தேதி மதியம் உணவு இடைவேளையின்போது, மளிகைக் கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியிடம் நைச்சியமாகப் பேசி தனது வீட்டிற்கு அழைத்து சென்ற முருகன், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அழுதுகொண்டே வீட்டிலிருந்து தப்பி வெளியே ஓடி வந்த சிறுமி, தன் தாயிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார்.