கிறிஸ்டியன் பாலா வழக்கு: கொலையை நாவலாக எழுதி சிக்கிய நிஜ சம்பவம்! Krystian Bala Case: The Writer Caught by His Own Crime Novel

Spread the love

கைதும் நீதிமன்ற விசாரணையும்

2005-ம் ஆண்டில் கிறிஸ்டியன் பாலா கைது செய்யப்பட்டார். போலந்து ஊடகங்களில் இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது. உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள் `தன்னுடைய கொலையையே நாவலாக எழுதிய எழுத்தாளர்’ என தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

விசாரணையில் பாலா தன்னை மிகக் கடுமையாக தற்காத்துக் கொண்டார். “இது வெறும் புனைகதை. ஒரு நாவலாசிரியனின் கற்பனையை வைத்து அவனைக் கொலையாளி என எப்படி குற்றம் சாட்ட முடியும்? குற்றச் சம்பவங்களை செய்தித்தாள்களில் படித்துத் தெரிந்துகொண்டுதான் நாவலில் எழுதினேன்!” என்று வாதிட்டார்.

ஆனால், போலீஸ் இந்த முறை நாவலை மட்டுமே நம்பி நிற்கவில்லை. அவர்கள் திரட்டிய தடயங்கள் அசைக்க முடியாதவையாக மாறின. பலியானவரின் செல்போனை விற்ற Allegro இணையதள கணக்கு பாலாவினுடையது. சம்பவத்துக்கு முன்பு, பாலாவின் கிரெடிட் கார்டு மூலம் ஒரு குறிப்பிட்ட தடிமன் கொண்ட கயிறுகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் வாங்கப்பட்டதற்கான ரசீதுகள் கிடைத்தன.

கிறிஸ்டியன் பாலா

கிறிஸ்டியன் பாலா

இணையதள கஃபேக்களில் இருந்து யானிஷெவ்ஸ்கி தொடர்பான வழக்கு விவரங்களை பாலா தொடர்ந்து தேடி வந்ததற்கான ஐபி முகவரி ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை வைத்து 2007-ம் ஆண்டு, போலந்து நீதிமன்றம் கிறிஸ்டியன் பாலாவை குற்றவாளி என அறிவித்து 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேல்முறையீட்டிற்குப் பிறகும், 2008-ம் ஆண்டில் அதே 25 ஆண்டு சிறைத்தண்டனை இறுதி செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

சரியான குற்றங்கள் உலகில் சாத்தியமே இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த வழக்கு இது. கிறிஸ்டியன் பாலா ஒருவேளை அந்த நாவலை எழுதாமல், அந்த பழைய செல்போனை விற்காமல் தன் அமைதியான வாழ்க்கையைத் தொடர்ந்திருந்தால், ஒருவேளை அந்த வழக்கு என்றென்றும் தீர்க்கப்படாமல் போயிருக்கலாம்.

ஆனால், குற்றவாளிகளின் மிகப்பெரிய பலவீனம் அவர்களது அகங்காரம்தான். தான் சட்டத்தை விட புத்திசாலி என்பதை உலகிற்குப் பறைசாற்ற வேண்டும் என்ற கிறிஸ்டியன் பாலாவின் விபரீத ஆசையே, அவர் தனது சொந்த நாவலின் மூலமாகவே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படக் காரணமானது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *