‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் அடாவடியாக பேசிய அமைச்சர் பார்த்திபன்!’ |“Passengers Shocked as Minister Parthiban Allegedly Misbehaves at Kilambakkam Bus Terminus”

Spread the love

இளைஞர் ஒருவர் தான் முன்பதிவு செய்திருந்த பேருந்து நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை என அமைச்சரிடம் கூறினார். அதற்கு உரிய பதிலை சொல்லாத அமைச்சர் பார்த்திபன் அந்த இளைஞரை நோக்கி, “நீ நல்லா சாப்பிட்டிருக்க…நான் இன்னும் சாப்பிடல…நீ நல்லா சாப்பிட்டிருக்க நான் இன்னும் சாப்பிடல…’ என எரிச்சலூட்டும் தொனியில் பேசியிருந்தார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த இளைஞர், ’10:45 மணி பேருந்தில் நான் டிக்கெட் புக் செய்திருந்தேன். 11:30 மணியை தாண்டியும் பேருந்து இன்னும் வரவில்லை. அதிகாரிகள் முறையாக பதில் சொல்லவில்லை. அமைச்சரிடம் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ‘நீ நல்லா சாப்பிட்டிருக்க’ என்கிறார். சாப்பிட்டுவிட்டு வருவதும் சாப்பிடாமல் வருவதும் என்னுடைய விருப்பம். இதெல்லாம் ஒரு பதிலா?’ என அதிருப்தியாக கூறினார்.

பயணியிடம் வாதிட்ட அமைச்சர்

பயணியிடம் வாதிட்ட அமைச்சர்

அதேமாதிரி, நகருக்குள் இருந்து கிளாம்பாக்கத்துக்கு முறையாக பேருந்து இல்லை எனக் கூறிய பயணியிடமும் நீண்ட நேரமாக அவர் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளாமல் வாதம் செய்து கொண்டிருந்தார். இது போன்று பேசிவிட்டு கடைசியில், ‘குறைகள் இருந்தால் சொல்லுங்கள். நிறைகள் ஆக்கிக் கொள்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.

கிளாம்பாக்கத்தில் தன்னுடைய முதல் ஆய்விலேயே அமைச்சர் பயணிகளிடம் பேசிய விதம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *