மழையால் வெளியில் வந்த பணம்
சமீபத்தில் பெய்த மழைக்கு பின், குடும்பத்தினர், விதைப்பதற்கு வயலை தயார் செய்து கொண்டிருந்த போது, பணம் கண்டுபிடிக்கப்பட்டது. புதைக்கப்பட்ட பாலித்தீன் பையை உழவு இயந்திரமொன்று மேற்பரப்பிற்கு கொண்டு வந்தது. மறுநாள், மங்கிலாலின் மனைவியும் மகனும் பையை கவனித்து, அதைத் திறந்து பார்த்தபோது, 500 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் கரையான்கள் அரித்து சேதப்படுத்தி இருந்தது.
நிராகரித்த வங்கிகள்
பின்னர், அந்தக்குடும்பத்தினர் சேதமடைந்த பணத்தாள்களுடன் பச்ச்பத்ரா மற்றும் பலோத்ராவில் உள்ள வங்கிக் கிளைகளை அணுகினர். இருப்பினும், அத்தாள்களின் நிலையை பார்த்த வங்கி அதிகாரிகள், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு வங்கியை அணுகுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினர். பணக் கஷ்டம் மற்றும் போதிய தகவல் இல்லாமை போன்ற காரணத்தால் அவர்கள் ஜெய்ப்பூருக்கு செல்வது தாமதமாகி இருக்கிறது. ஆனாலும் சேதமடைந்த கரன்சியை எப்படியாவது மாற்றிவிடலாம் என்றும், கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.5 லட்சத்தை மீட்டெடுக்கலாம் என்றும் மங்கிலால் இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறார்.
குடும்பத்திற்கு தெரியாமல் வயலில் பணத்தைப் புதைத்து வைத்த தனது முடிவுக்காக அந்த விவசாயி வருத்தம் மிகவும் வருத்தம் தெரிவித்துள்ளர். திருட்டு மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவர் மேற்கொண்ட அந்த முயற்சியியால் இறுதியில் அப்பணம் கரையான் அரித்து அழிந்துபோய்விட்டது. குடும்பத்தில் உள்ள அனைவரும் இதற்காக அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர். சேதம் அடைந்த ரூபாய் நோட்டுடன் மங்கிலால் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.