Chepauk, Tiruppur Pull Off Stunning Chases in TNPL 2026 | TNPL 2026: ஒரே நாள்… இரு அதிரடி சேஸ்! திண்டுக்கல்லில் தெறிக்கவிட்ட சேப்பாக் –திருப்பூர் அணிகள்!

Spread the love

206 ரன்கள்… திருப்பூருக்கு எளிதான இலக்கு இல்லை. ஆனால் சேஸிங்கைத் தொடங்கியதும் அந்த எண்ணிக்கை பெரிய தடையாகவே தெரியவில்லை.

அமித் சத்விக் களத்தில் இறங்கியதிலிருந்தே ஆட்டத்தின் வேகம் மாறியது. நெல்லை பந்துவீச்சாளர்களை குறிவைத்து தாக்கிய அவர், வெறும் 31 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். அதில் 8 சிக்ஸர்கள்! ஒவ்வொரு சிக்ஸரும் நெல்லையின் இலக்கை கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாக்கிக் கொண்டே சென்றது.

சத்விக் 76 ரன்களில் ஆட்டமிழந்தபோது, திருப்பூர் 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பிரதோஷ் ரஞ்சன் பாலும் 2 ரன்களில் வெளியேறினார். அந்த நேரத்தில் நெல்லைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது போலத் தெரிந்தது.

ஆனால் அங்கேயும் திருப்பூர் கதை முடியவில்லை. ஒருபுறம் துஷார் ரஹேஜா தனது ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மறுபுறம் கேப்டன் சாய் கிஷோர் களமிறங்கினார். இருவரும் சேர்ந்து மீதமிருந்த இலக்கை வேகமாகக் குறைத்தனர்.

துஷார் ரஹேஜாவின் பேட் தொடர்ந்து மேஜிக் செய்ய, 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார். சாய் கிஷோரும் 23 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் 18.1 ஓவர்களில் 207/2. 206 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை 11 பந்துகள் மீதமிருக்கும்போதே சேஸ் செய்து, திருப்பூர் தமிழன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

ஒரே மைதானம்… ஒரே நாள்… இரண்டு அதிரடி சேஸ்கள். முதல் போட்டியில் ஜெகதீசனின் 90 ரன்கள் சேப்பாக்கை வெற்றிக்கு அழைத்துச் சென்றது என்றால், இரண்டாவது போட்டியில் சத்விக்கின் 76 ரன்களும் துஷாரின் ஆட்டமிழக்காத 90 ரன்களும் திருப்பூரின் சேஸிங்கை எளிதாக்கியது.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *