‘குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்யபாமா’ தாராபுரத்தில் கவனத்தை ஈர்க்கும் சர்ச்சை போஸ்டர்கள்! | thaaraapuram mla Sathyabama resignation controversy posters

Spread the love

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ‌.தி.மு.க தரப்பில் பேட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யபாமா.

எஸ்‌‌.பி வேலுமணி அணியில் இடம்பெறுவதாக ஆதரவு அளித்து வந்த நிலையில், திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரைச் சந்தித்து கடிதம் கொடுத்தார்.

அதே கையோடு த.வெ.க- வில் இணைந்தார்‌‌. தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே மாதத்தில் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க- வில் இணைந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

சத்யபாமா அங்கம் வகித்த அ.தி.மு.க மட்டுமின்றி தொகுதி மக்களும் இவருக்கு எதிராக வினையாற்றி வருகின்றனர்.

தாராபுரத்தில் கவனத்தை ஈர்க்கும் சர்ச்சை போஸ்டர்கள்

தாராபுரத்தில் கவனத்தை ஈர்க்கும் சர்ச்சை போஸ்டர்கள்

இந்த நிலையில், “தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க தொண்டர்களின் வியர்வை சிந்திய உழைப்பில் வெற்றி பெற்று, MLA-ஆகி தற்போது TVK-வின் குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்தியபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என தாராபுரம் தொகுதியின் பல இடங்களிலும் அ.தி.மு.க தாராபுரம் சட்டமன்றத் தொகுதி என்கிற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவருக்கு எதிரான இந்தச் சுவர் விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *