குப்பையோடு போன 5½ பவுன் செயின்: தேடி எடுத்துக் கொடுத்த தூய்மை தேவதைகள்! – திருச்சி நெகிழ்ச்சி \ Trichy Sanitation Workers Return Lost Gold Chain to 70-Year-Old Woman

Spread the love

திருச்சியில் இன்று 70 வயது மூதாட்டி குப்பையில் தவறவிட்ட 5 1/2 பவுன் நகையை, தூய்மைப் பணியாளர்கள் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த சம்பவம், நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரங்கம் சித்திரை வீதியைச் சேர்ந்த சுசீலா என்பவர், வீட்டில் இருக்கும் பெருமாள் படத்திற்கு பூ மாலைகளுடன் தங்கச் செயினையும் போட்டு அலங்கரித்து வைத்திருந்திருக்கிறார். இன்று அவரின் கணவர் பூக்களுடன் நகையையும் தவறுதலாக குப்பையோடு சேர்த்து வீட்டிற்கு வெளியே வைத்துள்ளார். அவற்றை தூய்மைப் பணியாளர்கள் சேகரித்துச் சென்றுள்ளனர். பிறகு தான் அவர்களுக்கு அதில் நகை இருந்தது தெரியவந்துள்ளது. தவித்துக் கொண்டிருந்த மூதாட்டி, தூய்மைப் பணியாளர்களிடம் நடந்ததைச் சொல்லிய பிறகு அவர்கள், நகையைத் தேடிக் கண்டுபிடித்து தந்துள்ளனர்.

இது குறித்து நகையை மீட்டுக் கொடுத்த தூய்மைப் பணியாளர்கள் திவ்யபாரதி மற்றும் பரமேஸ்வரி ஆகியோர் கூறுகையில், “வழக்கம்போல ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே உள்ள குப்பையைச் சேகரித்து கொட்டிவிட்டு வரும்போதுதான் அவர்கள் நகை இருந்ததை எங்களிடம் சொன்னார்கள். அவரின் கணவர் மாலையுடன் செயினையும் தெரியாமல் தவற விட்டுள்ளார். திரும்ப நாங்கள் சென்று, குப்பையைக் கிளறிப் பார்த்து செயினைக் கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்தோம்” என்றனர்.

இடத்தை மட்டுமல்ல மனதையும் தூய்மையாக வைத்திருக்கும் தூய்மை தேவதைகளின் இந்தச் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *