Tiger Shroff attack: டெல்லி டு மும்பை… டைகர் ஷெராப்பைச் சுட துப்பாக்கி கொடுத்த உ.பி பெண்கள்!

Spread the love

அங்கு ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினர். அங்கு வந்து துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய மைனர் வந்து துப்பாக்கி இருந்த பையை வாங்கிச் சென்றார். அதே நாள் அவர்கள் வேறு ஒரு ரயில் மூலம் டெல்லிக்கு சென்றனர். அவர்கள் டெல்லியில் இறங்கியவுடன் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள் அதாவது கடந்த 18ம் தேதி துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு அதில் ஈடுபட்ட மூன்று பேரும் உடனே மும்பையை காலி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி குணாலிடம் அனில் பண்டிட் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

`எனது மகன் நிரபராதி”

மூவரும் சூரத்திற்கு டாக்சியில் சென்று அங்கிருந்து ராஜஸ்தான் செல்லும் ரயிலில் ஏறி சென்றனர். அவர்களை போலீஸார் கோட்டாவில் மடக்கி பிடித்து கைது செய்தனர். மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் ஒருவரான சுமித்தின் தாயார், தனது மகன் நிரபராதி என்றும், அவரை தேவையில்லாமல் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தனது மகன் ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலுக்குச் சென்றதாகவும், துப்பாக்கிச்சூடு அல்லது ஆயுதங்கள் விநியோகம் செய்ததாகக் கூறப்படும் எந்த சம்பவத்திலும் அவருக்கு தொடர்பு கிடையாது என்றும் கூறினார். மேலும், “என் மகன் ஒரு துணிக்கடையில் மூன்று வருடங்களாக வேலை செய்கிறான். அவன் 9-ம் வகுப்பு வரை படித்திருக்கிறான். அவன் காது ஷ்யாமுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றான்.

தினக்கூலி மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே குடும்பம் இருக்கிறது. வாடகை வீட்டில் வசிக்கிறோம். அதிக வாடகை காரணமாக சமீபத்தில் இடம் மாறினோம்” என்று சுமித்தின் தாய் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *