கடந்த 2011ல் விஜய் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு இயக்க பயணத்தை ஆரம்பித்தார். தகவல் தொழில் நுட்ப பிரிவு, இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர், கும்பகோணம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தொடர்ந்து 15 ஆண்டுகளாக எந்த சர்ச்சைகளிலும் சிக்காமல் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ரோட்டரி சங்கத்தில் உறுப்பினராக இருந்ததால் பல மட்டத்தில் இவருக்கான தொடர்பு நீண்டது. கஜா புயல், கொரோனா உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களுக்காக களத்தில் நின்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தவர். குறிப்பாக கொரோனா சமயத்தில் தொடர்ந்து ஆறு மாதம் உணவு வழங்கினார். ரத்ததான முகாம் உள்ளிட்ட தலைமை அறிவித்த அனைத்தையும் அக்கறையுடன் செயல்படுத்தியவர்.

போராட்டங்கள் முன்னெடுத்தமைக்காக வினோத் மீது சுமார் 7 வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. வெற்றி பெற்றதும் வினோத், `தளபதியால் இது சாத்தியமானது. 30 ஆண்டுகளாக மாற்றமின்றி இருந்த அரசியல் கோட்டையை உடைத்து வரலாறு படைத்துள்ளோம். தளபதி தான் இந்த வெற்றிக்கான அடித்தளம். இது சாதாரண வெற்றி அல்ல. இது மாற்றத்தின் குரல். மக்கள், தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதே என் குறிக்கோள். இதுவரை இருந்தவர்கள் செய்ய தவறியதை அறிந்து அதில் கவனம் செலுத்தி எவ்வித குறையும் இல்லாத தொகுதியாக மாற்றுவேன்” என்றார்.
தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். `பிரச்சாரத்தில் வித்யாசமான முறையை கையாண்டது போல் கும்பகோணத்தையும் மாற்றுவார் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது’ என்றனர்.