கும்பகோணம்: 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 15 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு

Spread the love

கும்பகோணம், நாச்சியார் கோயில் அருகே உள்ள பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருப்பூரில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வருகிறார். இரண்டாம் வகுப்பு படிக்கும் தனது 6 வயது மகளை அக்கா முறை கொண்டவர் பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளார். அந்த பெண்ணின் மகனுக்கு 15 வயதாகிறது பெயிண்ட் கடையில் வேலை செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை அண்ணன் முறை கொண்ட அந்த 15 வயது சிறுவன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இது அந்த சிறுவனின் அம்மாவுக்கு தெரிந்தும் சிறுமியின் அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து விட்டார். திருப்பூரில் இருந்து அம்மா தன் மகளுக்கு செல்போனில் வீடியோ கால் மூலம் பேசியிருக்கிறார். அப்போது தன் மகள் முகம் வீங்கியும், உதட்டில் காயமும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனே சிறுமியின் அம்மா கிளம்பி கும்பகோணம் வந்து விட்டார். அப்போது பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனின் அம்மா அவரை மிரட்டியதாக சொல்கிறார்கள். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி, சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டதுடன் மயங்கி விழுந்து விட்டதாக சொல்லப்படுகிறது. உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது தெரிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சிறுமியின் அம்மா திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு போக்சோ வழக்கு பதிந்து சிறுவனை பிடித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் அம்மா, எ`துவும் அறியாத என் பிஞ்சு மகளிடம் தவறாக நடந்து படுபாதகச் செயலை செய்து விட்டு வெளியே சொல்லக் கூடாது என்று மிரட்டினர். தாத்தா ஒருவரும் தன்னிடம் தப்பா நடந்து கொண்டதாக என் மகள் சொல்கிறாள். இதை கேட்ட போது எனக்கு நெஞ்சு சுக்கு நூறாகி விட்டது. அக்கா முறை என்பதால் நம்பி வீட்டில் விட்டுச் சென்றேன் இப்படி செய்து விட்டான். இதற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும்’ என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *