உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) வரும் ஜூன்-2 முதல், 6-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான். குருவின் திருவருள் பார்வை உங்களுக்குப் பலவிதத் திலும் ஆதாயத்தை அளிப்பதாக அமையும்.
1. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளின் திருமணத்தைப் போராடி முடிப்பீர்கள். அதேநேரம் உறவினர்கள், நண்பர்களில் சிலர் உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடும். சொத்து விஷயங்களிலும் கவனம் தேவை.
2. வெளிவட்டாரத்தில் ஓரளவு மதிப்பு உண்டு. பேச்சிலும், செயலிலும் நிதானம் அவசியம். பழைய வழக்குகளில் இழுபறி நிலையே இருக்கும். எனினும், வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. அரசுக்காரியங்கள் முழுமை அடையும்.
3. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும். வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். நேரம் தவறி உண்பது, உறங்குவது வேண்டாம்.
4. உங்களின் தன-லாபாதிபதியான குரு, தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால், குடும்பத்தில் அமைதி திரும்பும். செல்வாக்கு கூடும். திடீர்ப் பணம் வரவு உண்டு.
5. உங்கள் ராசிநாதனும், விரயாதிபதியுமான சனிபகவானின் நட்சத்திரத்தில் செல்லும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தடுமாற்றங்கள் விலகும். புதுப் பதவிகள் தேடி வரும். அரைகுறையாக நின்றுபோன வீட்டை முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள்.
6. குருபகவானின் பார்வையும் சாதகமான பலன்களைத் தரும். குருபகவான் 2-ம் இடத்தைப் பார்ப்பதால், எல்லா விஷயங் களிலும் வெற்றி உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன்-மனைவிக்குள் இருந்த சச்சரவுகள் விலகும்.
7. குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தைப் பார்ப்பதால், கௌரவ பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். தாய்வழிச் சொத்துகள் கிடைக்கும். அலுவலகத்தில் அதிரடி முன்னேற்றம் உண்டு.
8. குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பார்ப்பதால், அரைகுறையாக நின்றுபோன கட்டடப் பணிகளை, இனி முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். அதற்கான அரசாங்கக் கட்டட அனுமதி, வங்கிக்கடன் ஆகியவை தாமதமின்றி கிடைக்கும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணம் சிறப்புற நடந்தேறும்.
9. வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை எடுத்தெறிந்து பேசாதீர்கள்.
10. உத்தியோகத்தில் வேலைப்பளு உண்டு. சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். நீண்டநாளாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் தேடி வரும்.
11. கணினித் துறையினருக்குப் பெரிய சம்பளத்துடன் வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தூக்கமின்மை, சளித்தொந்தரவு வரக்கூடும். கலைஞர்களுக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர் களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். அரசின் பாராட்டுகள் கிடைக்கும்.