” 50 ஆண்டுகால விஷத்தை, ஆட்சிக்கு வந்த உடனேயே முறித்துவிட முடியாது!” – அமைச்சர் ரமேஷ் சமாளிப்பு

Spread the love

கடந்த 15 வருடங்களாக சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சொந்தமான மக்களிடம் ‘நாங்கள் உங்களோடு நிற்கிறோம்’ என பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து மாறி மாறி ஜெயித்துவந்த தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்தான் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஆக, வாக்கரசியலுக்காக இந்தக் கட்சிகள்தான் கரூர் மக்களை இதுநாள்வரையிலும் ஏமாற்றி வந்திருக்கின்றன. குறிப்பாக அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியின் தேர்தல் அறிக்கையிலேயே ‘இனாம் நிலத்தை மக்களுக்கு பட்டா எழுதித்தருகிறோம்’ என பொய்யான வாக்குறுதி கொடுத்து ஜெயித்திருக்கிறார்கள்.

இந்த சூழலில், த.வெ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு, சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக ஆய்வு செய்தோம்.

அதில் இனாம் நிலத்தை, ‘கோயிலுக்குச் சொந்தமான இடம்’ எனக்கூறி, 471 சர்வே நம்பர்களை கடந்த ஆட்சியாளர்கள் ப்ளாக் செய்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே ப்ளாக் செய்து வைக்கப்பட்டிருந்த ரிலீஸ் செய்த முதல்வர், அவற்றை தனிநபர்களுக்கு பட்டா வழங்கவும் அனுமதி அளித்தார்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது… சம்பந்தப்பட்ட இடத்தில் அரசு நிறுவனங்களும் அமைந்திருக்கின்றன. இதற்காக சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு அரசுத்தரப்பில் இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்பட்டிருக்கிறது. நில உரிமையே இல்லாத ஒருவருக்கு அரசு எப்படி இழப்பீடு வழங்கும்?

உண்மை இப்படியிருக்க…. இத்தனை ஆண்டுகாலமாக ஆட்சி செய்தவர்கள், 1912-ல் உள்ள கோயில் ஆவணங்களை வைத்துக்கொண்டு இ.ஓ மூலமாக, ‘இது கோயில் நிலம்’ என பொய்யாக ஒரு வழக்கைத் தொடுத்து ஒட்டுமொத்தமாக சம்பந்தப்பட்ட இடங்களை பட்டா பரிமாற்றம் செய்ய முடியாதபடி ப்ளாக் செய்திருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், ஆட்சியாளர்களிடம் முறையிடும்போது, குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு என்.ஓ.சி கொடுத்துவிடுவதாகக்கூறி பேரம் பேசி மிரட்டி வந்திருக்கிறார்கள். கரூர் மட்டுமல்ல… தமிழ்நாடு முழுக்கவே இதுபோன்ற பிரச்னைகள் இருக்கின்றன.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *